வெள்ளைப்பிட்ட உழவாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Zoonavena|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வெள்ளைப்பிட்ட உழவாரன்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Zoonavena
இனம்:
இருசொற் பெயரீடு
Zoonavena sylvatica
(Tickell, 1846)

வெள்ளைப்பிட்ட உழவாரன் அல்லது வெள்ளைப்பிட்ட ஊசிவால் உழவாரன் (white-rumped spinetail or white-rumped needletail) (உயிரியல் பெயர்: Zoonavena sylvatica) என்பது வங்காளதேசம், இந்தியா ( மேற்குத் தொடர்ச்சி மலைகள் ) மற்றும் நேபாளத்தின் காடுகளில் காணப்படும் ஒரு உழவாரன் இனம் ஆகும். இது பெரும்பாலும் காடுகளின் நடுவில் உள்ள நீர்நிலைகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

வெள்ளைப்பிட்ட உழவாரன் பறவையானது ஊர்க்குருவியை விட அளவில் சிறியது. சுமார் 11 செ.மீ நீளமிருக்கும். அலகு கறுப்பாகவும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாகவும், கால்கள் கறுப்பாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி கறுப்பாகவும் பிட்டம் வெள்ளையாகவும் இருக்கும். மோவாய், தொண்டை, மார்பு ஆகியன சாம்பல் பழுப்பாக இருக்கும். அடி வயிறும் வாலடியும் வெண்மையாக இருக்கும். இது பொத்தோற்றத்தில் வீட்டு உழவாரனை ஒத்திருக்கும் இதனை வெண்மையான பிட்டமும் வாலடியையும் கொண்டு பிரித்து அறியலாம்.[2]

நடத்தை[தொகு]

வெள்ளைப்பிட்ட உழவாரன்கள் 20 முதல் 50 வரையான பறவைகள் கூட்டமாக பறந்து இரைதேடும். காடுகளின் மேலும், பல்வெளிகளையடுத்தும், காட்டாறுகளைச் சார்ந்தும் இவை திரியக்காணலாம். அடி மரங்களில் காணப்படும் பொந்துகளில் இவை கூட்டமாகச் சென்று அடையும். பறக்கும் பூச்சிகள், வண்டுகள் முதலியன இதன் உணவாகும். பறக்கும்போது சிக், சிக் என கத்தியபடி பறக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Zoonavena sylvatica". IUCN Red List of Threatened Species 2016: e.T22686649A93119834. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22686649A93119834.en. https://www.iucnredlist.org/species/22686649/93119834. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 283–284.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைப்பிட்ட_உழவாரன்&oldid=3785343" இலிருந்து மீள்விக்கப்பட்டது