வீரமும் ஈரமும்
வீரமும் ஈரமும் | |
---|---|
இயக்கம் | சஞ்சய் ராம் |
இசை | யுகேந்திரன் |
நடிப்பு | |
வெளியீடு | 5 அக்டோபர் 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரமும் ஈரமும் (Veeramum Eeramum) என்பது 2007 ஆண்டு வெளியான தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். சஞ்சய் ராம் இயக்கிய இப்படத்தில் சரவணன், அலெக்ஸ், தீபன் சக்ரவர்த்தி, சஞ்சய் ராம், கிருஷ்ணா, சோனிகா, தானியா, அஞ்சுஷா, சுதாகர் வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 5 அக்டோபர் 2007 அன்று வெளியானது.
கதை
[தொகு]சங்கர் அய்யா (சரவணன்) ஒரு குண்டர் குழு தலைர் ஆவார். அவரால் தூத்துக்குடி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் அரிவாள் கலாச்சாரம் நிலவுகிறது. அவர் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவும் ஒரு நல்ல மனிதர் என்பதன் காரணமாக கிராம மக்கள் அவரை மதிக்கிறார்கள். அவரது உறவினரும் கொடூரமான, சூழ்ச்சி மிக்கவனுமான செம்மரை பாண்டியனும் (சுதாகர் வசந்த்) சங்கர் அய்யாவுக்கும் பல தசாப்தங்களாக குடும்பப் பகை நிலவுகிறது. எனவே அடிக்கடி இருவருக்குமிடையில் குழுச் சண்டைகள் நடைபெற்று ரத்தம் சிந்தப்படுகிறது. இது கடலோரப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குகிறது.
காவல் கண்காணிப்பாளர் வீரசங்கிலி (தீபன் சக்ரவர்த்தி) கும்பல் போர்களை தடுத்து நிறுத்துமாறு அரசு நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுகிறார். இந்த கும்பல் போரை முடிவுக்குக் கொண்டவர முயன்ற இதற்கு முந்தைய காவல் கண்காணிப்பாளர் காணாமல் போயிருந்ததார். (உண்மையில் அவர் வெட்டப்பட்டு, அவரது உடல் ஆழ்கடலில் செம்மரையின் கும்பலால் மூழ்கடிக்கபட்டது! ) வீரசங்லி மிகவும் உறுதியான மனிதர், அவர் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறார். அதன் ஓரு பகுதியாக செம்மரையை சந்தித்து அவரது மரணம் குறித்து அச்சுறுத்துகிறார். ஆனாலும் செம்மரையை உடன்பாட்டுக்கு கொண்டுவர அவரால் இயலவில்லை. சங்கர் மீது தீராத வெறுப்பைக் கொண்ட செம்மரை, சங்கர் குடும்பத்தின் செல்வாக்கை ஏற்கமுடியாமல் அமைதியாக வாழ்கைக்குத் திரும்பாமல், சூழ்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டே வருகிறார். இது அதிர்ச்சியூட்டும் உச்ச முடிவுக்கு வழிவகுக்கிறது.
நடிகர்கள்
[தொகு]- சரவணன் சங்கர் அய்யாவாக
- தீபன் சக்ரவர்த்தி வீரசங்கிலியாக
- சஞ்சய் ராம்
- சோனிகா
- தானியா
- அஞ்சுஷா
- சுதாகர் வசந்த்
இசை
[தொகு]இப்படத்திற்கு யுகேந்திரன் இசையமைத்தார்.[1]
- "மானே மயிலழகே" - கே.எஸ் சித்ரா
- "ஓரு க்ஷணம்" - ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்ரீலேகா பார்த்த்சாரதி
- "புருஷா பயலே" - கார்த்திக், பிரசாந்தி
- "வானம் தொட்டு" - யுகேந்திரன்
- "சம்பம் புடிச்ச" - ஸ்வர்ணலதா
வரவேற்பு
[தொகு]இந்து எழுதியது "இயக்குநர் சஞ்சய்ராம், கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், தயாரிப்பு ஆகியவற்றை செய்துள்ளார். உரையாடல், பாடல், தயாரிப்பைப் பொருத்தவரை நன்கு செய்துள்ளார். இருப்பினும், இந்த வகையான கதைக்களம் தமிழ் சினிமாவில் ஏற்கனவே சிறப்பாகக் கையாளப்பட்டிருப்பதால், அவர் திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். " [2] IndiaGlitz "வீரமும் ஈரமும் படமானது அதிரடி படப் பிரியர்களுக்கு ஆனந்தத்தை வழங்கும், அதிரடி திரைப்படமாக உள்ளது" என்று எழுதியது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.rediff.com/movies/2007/sep/20ssyug.htm
- ↑ "Plot without pep". தி இந்து. 12 October 2007. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/plot-without-pep/article3023877.ece. பார்த்த நாள்: 21 August 2014.
- ↑ https://www.indiaglitz.com/veeramum-eeramum-hindi-movie-review-9366