விவிலிய முன் அறிவிப்பு
விவிலிய முன் அறிவிப்பு (வேதாகமத் தீர்க்கதரிசனங்கள் அல்லது விவிலிய இறைவாக்குகள்) (Bible prophecy அல்லது biblical prophecy) என்பது கிறித்தவ மறைநூலான விவிலியத்தில் முன் அறிவிப்பாளர்கள் (தீர்க்கதரிசிகள், இறைவாக்கினர்) மூலம் மனிதர்களிடம் கடவுள் கூறியவை பற்றிய பகுதிகளாகும். வேதாகம முன்னறிவிப்பாளர்கள் கடவுளிடமிருந்து வெளிப்பாடுகளைப் பெற்றனர் என யூதர்களும் கிறிஸ்தவர்களும் பொதுவாக நம்புவர்.[1][2][3]
மேலோட்டம்
[தொகு]எபிரேய வேதாகமத்தில் இறைவாக்கினர் இசுரயேலர்களைத் தங்கள் பாவங்களிலிருந்தும் சிலை வழிபாடுகளிலிருந்தும் மனந்திரும்பும்படி அடிக்கடி எச்சரிக்கின்றனர். மனந்திரும்புதல் வெகுமதிகளையும், திரும்பாதிருத்தல் தீமையையும் தருவிக்கும் என்பது எச்சரிப்பாகும். ஆசீர்வாதம் மற்றும் பேரழிவுகளுக்கு தெய்வமே காரணம் காட்டப்படுகிறார். வேதாகம இறைவாக்குகளை நம்புகிறவர்களின்படி அவைகளில் பெரும்பாலானவை, அந்தப் பகுதிகளுக்குப்பின் வரும் பகுதிகளிலேயே நிறைவேறியுள்ளன.
யூத, கிறிஸ்தவ மதங்களில், வேதாகமத்தின் பல பகுதிகள் வரவிருக்கின்ற மெசியாவைப் பற்றிய இறைவாக்குகளாகக் கருதப்படுகின்றன. மெசியாவைப் பற்றிய இந்த இறைவாக்குகளை கிறிஸ்து இயேசு நிறைவேற்றிவிட்டார் எனக் கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், யூதகுருசார் யூதமதத்தார் யூத மெசியாவின் வருகைக்கும் யூத அறுதிவிளைவியலின் ("Jewish eschatology") மற்ற அடையாளங்களின் நிறைவேறுதலுக்கும் இன்னமும் காத்திருக்கின்றனர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மெசியாவைப்பற்றிய பல இறைவாக்குகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதே நிறைவேறும் என எண்ணுகின்றனர். ஆனால் சில கிறிஸ்தவர்கள் (Full Preterists) மெசியாவைப் பற்றிய இறைவாக்குகள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாக நம்புகின்றனர். யூதகுருசார் யூத மதம் மெசியா முதலாவது வருவதையும், மெசியாவின் ஆட்சி யுகம் தோன்றுவதையும் வேறுபிரிப்பதில்லை.
"இறுதிக்காலம்" அல்லது "கடைசி நாட்கள்" என்பது அதிகம் கலந்தாய்வு செய்யப்படும் மற்றொரு விஷயமாகும், குறிப்பாக, யோவானுக்கு வெளிப்படுத்தின விஷேசத்தின்படியானவை இதில் அடங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ F.F. Bruce, Israel and the Nations, Michigan, 1981 [1963], page 32.
- ↑ Greidanus, Sidney (1999). Preaching Christ from the Old Testament. Wm. B. Eerdmans Publishing. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-4449-1. பார்க்கப்பட்ட நாள் 2009-04-13.
- ↑ Siegfried Herrmann, A History of Israel in Old Testament Times, London, 1981, SCM Press Ltd, page 155.