உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப்
Willem Jacob van de Graaf
ஒல்லாந்த இலங்கையின் 35வது ஆளுனர்
பதவியில்
7 பெப்ரவரி 1785 – 15 சூலை 1794
முன்னையவர்பியேர் ஆந்திரே டி செயிண்ட் துரோப்பெசு
பின்னவர்யோகான் வான் ஏஞ்சல்பீக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1736-05-28)மே 28, 1736
இறப்புதிசம்பர் 10, 1804(1804-12-10) (அகவை 68)

வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப் (Willem Jacob van de Graaf, 28 மே 1736 அல். 1737, - 10 டிசம்பர் 1804) என்பவர் ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுனராகப் பணியாற்றியவர்.

கொழும்பில் உள்ள ஒரு ஞாபகச் சின்னம்

வில்லெம் யாக்கோப் ஐக்கிய மாகாணங்களின் இராணுவ மேஜர் செபஸ்தியான் வான் டி கிராஃப், கீர்த்ரூட் வான் வின்செலர் ஆகியோரின் மூன்றாவது மகவாவார். தனது 18வது அகவையில் பிளிச்டோர்ப் என்ற கப்பலில் இலங்கை சென்றார். அங்கு காலியில் ஒரு வணிகராக இருந்து, காலியின் ஒல்லாந்தத் தளபதியின் மகள் அக்னீட்டா கிளாரா சாம்லாண்ட் (1745-1773) என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். 1766 இல் இவர் கறுவா சாகுபடியைக் கண்காணிக்கும் அரச அதிகாரியாக கொழும்பில் பணியைத் தொடங்கினார். முதல் மனைவியின் இறப்பை அடுத்து, இவர் கிறித்தீனா எலிசபெத் வான் ஆஞ்செல்பீக் (1756-1792) என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு 11 பிள்ளைகள் பிறந்தனர்.[1]

1785 ஆம் ஆண்டில் இலங்கை ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1794 இல் இந்தியாவில் டச்சுக் குடியேற்றங்களின் பணிப்பாளராகவும், முதலாவது கவுன்சிலராகவும் நியமிக்கப்பட்டார். இவரது மனைவியின் தந்தை யோகான் வான் ஏஞ்சல்பீக் இலங்கை ஆளுனரானார்.[2] வில்லெம் யாக்கோப் இளைப்பாறிய பின்னர் ஒல்லாந்து திரும்பி யூத்ரெக்ட் நகரில் 1804 ஆம் ஆண்டில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. Lever, 1999, Gorkumse geslachten VOC en Ceylon (18de eeuw), Oud Gorcum Varia, 16, pp. 9-30
  2. Cahoon, Ben. "Dutch Governors". Worldstatesmen. பார்க்கப்பட்ட நாள் 1 March 2013.
  3. G.H.P. de Waard, Van buitenplaats tot steenbakkerij - de histoie van De Liesbosch[தொடர்பிழந்த இணைப்பு]