உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்கு இடம்பெயர்வு கண்காணிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்கு இடம்பெயர்வு கண்காணிப்பு (Animal migration tracking) என்பது பறவைகள், விலங்குகள் போன்றவைகளின் இடம்பெயர்வுகளை ஆராச்சிசெய்ய உதவும் ஒரு கருவியாகும்.[1][2][3]

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஒரு நரியின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கருவி

பயன்பாடு

[தொகு]

பறவை, மற்றும் விலங்கு ஆராய்ச்சியாளர்கள் பலருக்கும் முற்காலத்தில் இவற்றின் இடம்பெயர்வுகளைக் கண்காணிக்கபெரும் -முயற்சி எடுக்க வேண்டியதிருந்தது. பறவைகளின் கழுத்தில் தனது முகவரியையோ, குறியீட்டு எண்ணையோ இரும்பு தகடுகளில் எழுதி கட்டிவிட்டு அதன் மூலம் சில நாட்கள் கழித்து அப்பறவையைப் பிடித்து சோதனைசெய்து அதன் விபரங்களை பெற்று வந்தார்கள். இந்த முறை மிகவும் கடினமாக இருந்தது. இந்த முறையை தவிர்க்கவும் மேலும் பறவைகளின் உணவு, உறைவிடம் பற்றியும் தெரிந்துகொள்ள நினைத்தார்கள். இந்த வளர்ச்சியில் வந்ததுதான் இந்த கருவியாகும்.

பறவைகள் இடப்பெயர்ச்சி

[தொகு]
பறவையின் காலில் சிறு கருவி

அமெரிக்காவின் இயற்கை ஆர்வலர் ஜான் ஜேம்ஸ் அடுபன் என்பவரால் 1803ஆம் ஆண்டு பறவைகளின் இடம்பெயற்வு பற்றிய ஆராய்ச்சி நடந்தது. இவரின் கணக்குப்படி பறவைகள் ஒவ்வோரு வருடமும் ஏதோ ஒரு காரணங்களுக்காக ஒரு இடத்திற்கு வந்துபோவதைக் கவனித்தார். இதன் காரணமாக அந்த பறவைகள் எங்கு செல்கின்றன என்பதை அறிய அதன் காலில் ஒரு கயிறு ஒன்றைக்கட்டினார். வசந்த காலங்களில் இந்த பறவைகள் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்ததை அடுமன் உறுதிசெய்தார். இதன் மூலம் ஆண்டுதோறும் பறவைகள் இடப்பெயற்சி செய்வதை கணக்கிட முடிவுசெய்தார்.

வகைகள்

[தொகு]

வானொலி அலை மூலம் கண்காணிப்பு

[தொகு]

விலங்குகள், பறவைகளின் இடம்பெயர்வை கண்டுபிடிக்க ரேடியோ அலை முதலில் பயன்படுத்தப்பட்டது. இவற்றில் இரண்டு விதமான முக்கிய நிலைகளை உள்ளடக்கியிருந்தது, அவை ஒன்று வானொலி அலைகளின் பங்கு மற்றொன்று வானொலி ஒலிபரப்பு என்றும் கணக்கிடப்பட்டது. அதோடு இந்த கருவிய பறவகளின் கணுக்கால், கழுத்து, முதுகு போன்ற இடங்களின் இணைத்துவிட முடியும். இந்த கருவி பெரியதாக இருந்ததால் வாத்து போல் உள்ள பெரிய பறவைகளின் மேல் மட்டுமே பொருத்த முடியும். அப்படி பொருத்தும்போது வானொலொயில் கிடைப்பதுபோல் தான் ஒலி கிடைக்கும். இந்த வகையான ஒலி அலையானது பொதுவாக விமானம் போன்றவைக்கு கிடைப்பதுபோல் அளவிடப்படும். அப்படி பொருத்தப்படும் கருவி மீண்டும் தேவைப்படும் பட்சத்தில் கிடைப்பது அரிதாகவே இருக்கும்.

செயற்கைக்கோள் கண்காணிப்பு

[தொகு]
ஒரு வண்ணத்துப்பூச்சியின் இறகில் பொருத்தப்பட்டுள்ள கருவி

இவர்செயற்கைக்கோள்,வானலை அடையாளம்RFID

மேற்கோள்

[தொகு]
  1. Kingdon, Amorina (22 January 2018). "Are Scientific Tracking Tags Hurting Wild Animals?". Hakai Magazine. https://www.hakaimagazine.com/news/are-scientific-tracking-tags-hurting-wild-animals/. 
  2. "About us - Where we started and where we're going". Wildlife Drones (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  3. "Technology and Development at the USDA Forest Service, Satellite/GPS Telemetry for Monitoring Lesser Prairie Chickens". www.fs.fed.us. பார்க்கப்பட்ட நாள் 2017-03-02.

மேற்கோள்கள்

[தொகு]