வித்யாசாகர் மகளிர் கல்லூரி
வகை | இளங்கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1960 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
Academic affiliation | தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
தலைவர் | திரு விவேக் குப்தா |
முதல்வர் | முனைவர் சுதாப ராய் |
அமைவிடம் | 39, சங்கர் கோஷ் லேன், சிம்லா, மச்சுவாபஜார், , , , 700006 22°34′56″N 88°22′01″E / 22.5823517°N 88.3669152°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | வித்யாசாகர் கல்லூரி இணையதளம் |
வித்யாசாகர் மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதுமான ஒரு மகளிர் கல்லூரியாகும்.
வரலாறு
[தொகு]கொல்கத்தா பெண்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒருங்கிணைந்த வித்யாசாகர் கல்லூரியில் 1931 ஆம் ஆண்டில் தனி மகளிர் பிரிவு தொடங்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் கல்லூரியின் மாணவிகளின் எண்ணிக்கை 1,189 ஆக உயர்ந்த காரணத்தால், கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு முழு அளவிலான தனி கல்லூரியாக 1960 இல் நிறுவப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் சிறந்த கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் நவீன வங்காளத்தின் முக்கிய கட்டிடக் கலைஞர்களில் ஒருவருமான பண்டிதர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் பெண்கள் முன்னேற்ற திட்டங்களையும் இலட்சியங்களையும் கொள்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டு அதற்காகவே அவரது பெயரையும் கொண்டுள்ளது. இவர், பெண்களுக்கு கல்வி கற்றல் மட்டுமே அவர்களை சுயமரியாதை உள்ள மற்றும் சுதந்திரமாகனவர்களாக மாற்றவும், ஆணாதிக்கம் நிறைந்த ஒரு சமூகத்தில் சுயமரியாதையையும் நம்பிக்கையையும் வளர்க்கவும் உதவும் என எண்ணி அதற்காக பாடுபட்டுள்ளார். மேலும் 1856 ஆம் ஆண்டில் விதவை மறுமணச் சட்டம் XV ஐ முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
கல்லூரி பற்றி
[தொகு]இந்த வித்யாசாகர் மகளிர் கல்லூரி காலை நேரத்தில் மட்டுமே செயல்படும் கல்லூரி ஆகும். பட்டப்படிப்பு மட்டுமல்லாது இக்கல்லூரி பல்வேறு வகையான கல்வி மற்றும் வேலை சார்ந்த தொழில்முறை படிப்புகளையும் வழங்குகிறது . இக்கல்லூரி மூன்று வளாகங்களைக் கொண்டுள்ளது. இம்மூன்று வளாகங்களும் வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் மைய மண்டலமான வடக்கு கொல்கத்தாவின் மையத்தில் உள்ளது.
- இதன் பிரதான வளாகம் கொல்கத்தா 6, சங்கர் கோஷ் லேனில் 39-வது இடத்திலும்,
- அதன் அடுத்த வளாகம் 8ஏ ஷிப்நாராயண் தாஸ் லேனிலும்,
- வித்யாசாகர் ஸ்மிருதி மந்திர் வளாகம், பண்டிதர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் 36 வித்யாசாகர் தெருவில் உள்ள இல்லத்திலும் அமைந்துள்ளது.
துறைகள்
[தொகு]கலைப்பிரிவு
- வங்காளம்(கவுரவம்)
- ஆங்கிலம் (கவுரவம்)
- கல்வி
- அரசியல் அறிவியல் (கவுரவம்)
- வரலாறு (கவுரவம்)
- சமூகவியல்
- திரைப்படப் படிப்புகள்
- பத்திரிக்கை
- தத்துவஞானி (கவுரவம்)
- புவியியல் (கவுரவம்)
- சமஸ்கிருதம்
- இந்தி (கவுரவம்)
வணிகம்ப்பிரிவு
- பொருளாதாரம் (கவுரவம்)
அறிவியல் பிரிவு
- உயிரியல்(கவுரவம்)
- கணிதவியல் (கவுரவம்)
- விலங்கியல் (கவுரவம்)
- சுற்றுச்சூழல் அறிவியல்
- இயற்பியல் (கவுரவம்)
- உடலியல் (கவுரவம்)
- வேதியியல்(கவுரவம்)
- மின்னணுவியல்
நூலகம்
[தொகு]இக்கல்லூரியில் இரண்டு நூலகங்கள் உள்ளன- (ஷிப்நாராயண் தாஸ் லேனில் உள்ள 8ஏ என்ற மூன்றாவது வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மத்திய நூலகம், 23,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளுடன்) மற்றும் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கருத்தரங்கு நூலகம் (சுமார் 1000 குறிப்பு தொகுதிகளுடன்), இந்த கருத்தரங்கு நூலகம் முக்கியமாக மனிதநேயத் துறைக்கு உதவுகிறது. நூலகம் முழுமையான நூலக தற்செயல்பாட்டில் உள்ளது. [2]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]- விவேக் குப்தா (அரசியல்வாதி) இந்தக் கல்லூரியின் தலைவர்.
- மாலா ராய், [3] கொல்கத்தா தக்ஷின் மக்களவை உறுப்பினர்.
- பாவ்லி டாம், நடிகை.
சான்றிதழ் படிப்புகள்
[தொகு]- அழகுக்கலை பயிற்சி
- சமையல் பயிற்சி
- சித்திர வடிவமைப்பு பயிற்சி
மேலும் காண்க
[தொகு]- கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி
- வித்யாசாகர் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கல்லூரியின் வரலாற்று சுயவிவரம்".
- ↑ "Vidyasagar College for Women moves to Koha on cloud with L2C2 Technologies". பார்க்கப்பட்ட நாள் 19 September 2017.
- ↑ "Mala Roy". MyNeta. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.