விஜய நிர்மலா
விஜய நிர்மலா | |
---|---|
பிறப்பு | 20 பெப்ரவரி 1944 |
இறப்பு | 27 சூன் 2019 ஐதராபாத்து (இந்தியா) | (அகவை 75)
வாழ்க்கைத் துணை | லேட். கிருஷ்ண மூர்த்தி (முன்னாள் கணவர்) கிருஷ்ணா (கணவர்) |
பிள்ளைகள் | விஜய நரேஷ் (மகன்) |
விஜய நிர்மலா (Vijaya Nirmala, பெப்ரவரி 20, 1944 – சூன் 27, 2019) ஆந்திரத் திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர். இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். 2002இல் இவரது பெயர் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்று கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றது.[1] 2008இல், தெலுங்குத் திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக "ரகுபதி வெங்கையா விருதினைப்" பெற்றுள்ளார்.[2] இவரும், தெலுங்கு நடிகையான சாவித்திரி ஆகிய இருவர் மட்டுமே புகழ் பெற்ற சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவராகின்றனர்.
சொந்த வாழ்க்கை
[தொகு]விஜய நிர்மலா, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை திரைப்படத் தயாரிப்பில் பணிபுரிந்தவர். இவரது முதல் கணவர் கிருஷ்ண மூர்த்தி மூலமாக நரேஷ் என்கிற மகன் பிறந்தார். நரேஷ் தற்போது நடிகராக இருக்கிறார். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை மணந்து கொண்டார்.[3]
தொழில்
[தொகு]விஜய நிர்மலா 1950இல் வெளிவந்த "மச்ச ரேகை" தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது 7வது வயதில் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரது 11வது வயதில் "பாண்டுரங்க மகாத்மியம்" (1957) என்கிற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்துள்ளார். 1964இல், பிரேம் நசீர் நடித்த மலையாளத் திரைப்படமான "பார்கவி நிலையத்தில்" நடித்துள்ளார்.[4] மேலும், 1967இல், மீண்டும் பிரேம் நசீருடன் "உத்யோகஸ்தா" என்னும் படத்தில் நடித்துள்ளார். இப் படத்தை பி. வேணு தயாரித்திருந்தார். இவர், ஆந்திரத் திரைப்படத்துறையில் "ரங்குல ராட்டினம்" படத்தில் அறிமுகமானார்.[5]
இவர், தமிழில் "எங்க வீட்டுப் பெண்" திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.[1] அதைத் தொடர்ந்து, தமிழ் படங்களான "பணமா பாசமா", என் அண்ணன், ஞான ஒளி மற்றும் உயிரா மானமா போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் 1977இல் வெளிவந்த "சாக்ஷி" என்கிற தெலுங்குப் படத்தில் நடித்த போது தன் இரண்டாவது கணவரான நடிகர் கிருஷ்ணாவை சந்தித்தார். பிறகு இருவரும் சேர்ந்து 47 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர் நடித்த "சாக்ஷி" திரைப்படம் இவருக்கு இயக்குனராகும் விருப்பத்தை தூண்டியது.[1] இது வரை 200 படங்களில் நடித்துள்ளார். அதில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா 25 மற்றவை தெலுங்கில் நடித்தவையாகும்.[1]
மறைவு
[தொகு]விஜயநிர்மலா 2019 சூன் 27 அதிகாலை ஐதராபாது மருத்துவமனையொன்றில் மாரடைப்பினால் காலமானார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Vijayanirmala enters the Guinness". The Hindu (Chennai, India). 2002-04-30 இம் மூலத்தில் இருந்து 2003-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031114172705/http://www.hindu.com/thehindu/mp/2002/04/30/stories/2002043000330203.htm.
- ↑ Ragupathi Venkaiah Award to Vijaya Nirmala[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Bestowed with bliss". The Hindu (Chennai, India). 2007-08-04 இம் மூலத்தில் இருந்து 2009-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090503091259/http://www.hindu.com/mp/2007/08/04/stories/2007080452160600.htm.
- ↑ B. Vijayakumar (2009-11-16). "Bhargavi Nilayam 1948". Chennai, India: தி இந்து இம் மூலத்தில் இருந்து 2011-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629033144/http://www.hindu.com/mp/2009/11/16/stories/2009111651140400.htm.
- ↑ "Ragupathi Venkaiah Award to Vijaya Nirmala". Sify.
- ↑ https://www.thenewsminute.com/article/vijaya-nirmala-veteran-director-actor-and-mahesh-babu-s-mother-passes-away-73-104358
- ↑ "Actress-Director Vijaya Nirmala Dies At 75; Jr NTR And Others Post Tributes". NDTV.com.
- தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- 1946 பிறப்புகள்
- 2019 இறப்புகள்
- தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- தெலுங்கு மக்கள்
- மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தமிழ்நாட்டு நடிகைகள்
- இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர்கள்