உள்ளடக்கத்துக்குச் செல்

வால்டர் சிட்னி மெட்காஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்டர் சிட்னி மெட்காஃப்
Walter Sidney Metcalf
பிறப்பு(1918-05-18)18 மே 1918
இறப்பு25 சூலை 2008(2008-07-25) (அகவை 90)
நியூசிலாந்து
தேசியம்நியூசிலாந்துer
துறைஇயற்பிய வேதியியல்
பணியிடங்கள்வெல்லிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்
கேண்டர்பரி பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இ.யே.போவன்[1]
அறியப்படுவதுஒளி வேதியியல்
விருதுகள்டி.கே.சைடி பதக்கம் (1966)

வால்டர் சிட்னி மெட்காஃப் (Walter Sidney Metcalf) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பிய வேதியியலாளர் ஆவார்[2]. 1918 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி பிறந்த இவர் 2008 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 அன்று இறந்தார்.

வால்டர் மெட்காஃப் தனது முதல் அறிவியல் பட்டத்துடன் இணையாக இசை பாடத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பிரித்தானிய இயற்பிய வேதியியலாளர் இ.யே.போவனின் வழிகாட்டுதலுடன் முனைவர் பட்டம் பெற்றார்.

மெட்காஃப் தொடக்கத்தில் வெல்லிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின்னர் 1954 ஆம் ஆண்டு கேண்டர்பரி பல்கலைக்கழகம் என்று தற்போது அழைக்கப்படும் கேண்டர்பரி பல்கலைக்கழகக் கல்லூரிக்கு சென்றார். குறிப்பாக ஒளி வேதியியல் பாடத்தை கற்பித்த இவர் 1975 ஆம் ஆண்டு ஒரு பேராசிரியராக பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது ஆராய்ச்சிக்காக நியூசிலாந்தின் ராயல் சொசைட்டி 1966 ஆம் ஆண்டு டி.கே. சைடி பதக்கத்தை வழங்கியது[3]. வாழ்க்கையின் இறுதி காலத்தில் கால்சியம் வளர்சிதை மாற்ற ஆராய்ச்சியில் மெட்காஃப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Academic Genealogy of the NDSU Department of Chemistry, Biochemistry and Molecular Biology" (PDF). வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம், USA. Archived from the original (PDF) on டிசம்பர் 11, 2018. பார்க்கப்பட்ட நாள் March 16, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Phillips, Leon; Robinson, Ward (October 2008). Obituary. "Walter Sidney Metcalf (1928–2008)". Chemistry in New Zealand (New Zealand Institute of Chemistry): 143. http://nzic.org.nz/CiNZ/articles/obit_metcalf.pdf. பார்த்த நாள்: 2020-03-10. 
  3. "T. K. Sidey Medal: Recipients". T. K. Sidey Medal. Royal Society of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012. {{cite web}}: External link in |work= (help)