வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம்( North Dakota State University)
குறிக்கோளுரைநிலத்திற்காகவும் அதன் மக்களுக்காகவும்
வகைபொது, நிலமானியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1890
கல்வி பணியாளர்
871
நிருவாகப் பணியாளர்
1,614
மாணவர்கள்14,399
அமைவிடம்
பார்கோ
, ,
வளாகம்நகர பகுதி - பார்கோ வளாகம்: 258 ஏக்கர்கள் (1.0 கிமீ²)
நிறங்கள்மஞ்சள் மற்றும் பச்சை            
விளையாட்டுகள்14- NCAA பிரிவு 1
சுருக்கப் பெயர்பைசன்
நற்பேறு சின்னம்தண்டர்
சேர்ப்புவடக்கு டகோட்டா பல்கலைக்கழக அமைப்பு
இணையதளம்www.ndsu.edu
North Dakota State University

வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைகழகம் (North Dakota State University - NDSU) என்பது ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தின் பார்கோ நகரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். 1890 ஆம் ஆண்டில் இக்கல்விக்கழகம் வடக்கு டகோட்டா வேளாண்மைக் கல்வி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 258 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழக வளாகத்தில் ஏறத்தாழ 14,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் முழுநேரப் படிப்பில் இங்கு ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 55% ஆண்களும், 45% பெண்களும் உள்ளனர்.

வளாகங்கள்[தொகு]

இப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் பார்கோ நகரில் அமைந்துள்ளது .இது ஹெக்டர் சர்வதேச விமான நிலையத்திற்கும் (Hector International Airport) பார்கோ டோம் (Fargo Dome ) அரங்கிற்கும் மிக அருகில் அமைந்துள்ளது . அத்துடன் காட்சி கலைகள் ( Visual Arts ), நிலத்தோற்றக்கலை (Landscape Architecture ) போன்ற பிரிவுகள் மத்திய நகர் பகுதியில் (Downtown ) அமைந்துள்ளது.இதற்கு மேலதிகமா பல விவசாய மற்றும் கணித்துறை அராய்ச்சி மையங்கள் பிரதான வளாகத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது .

கல்வி துறைகள்[தொகு]

வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகம் பின்வரும் கல்லூரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:


  • பொறியியல் மற்றும் கட்டிடக்கலை
  • அறிவியல் மற்றும் கணிதம்
  • மனித அபிவிருத்தி மற்றும் கல்வி
  • கலை, மனிதநேயம், மற்றும் சமூகவியல்
  • மருந்தியல், மருத்துவ, மற்றும் தொடர்புடைய அறிவியல்
  • வர்த்தகம்
  • விவசாயம், உணவு, கணினிகள் மற்றும் இயற்கை வளங்கள்
  • பல்கலைக்கழக கல்வி
  • பட்டப்படிப்பு பள்ளி மற்றும் பலதுறை ஆய்வுகள்

விளையாட்டுக்கள்[தொகு]

இப்பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அணிகள் (வட டகோட்டா மாநில) பைசன் என அழைக்கபடுகின்றன .இதன் இலச்சினை அமெரிக்க பைசன் மிருகத்தின் படமாகும். பைசன் (அமெரிக்க) காற்பந்தாட்ட அணி 2011 இல் FCS தேசிய சாம்பியன் பட்டதை வெற்றி பெற்றது.அத்துடன் இங்கு பெண்களுக்கான சாதாரண காற்பந்து (Soccer ) ,கூடைப்பந்து ,அடிப்பந்தாட்டம் (Baseball ) ,கைப்பந்து என்ன்பனவும் பிரபல விளையாட்டுகளாகும்

ஆராய்ச்சி மையங்களும் ஆராய்ச்சிகளும்[தொகு]

அமெரிக்க தேசிய விஞ்ஞான அமைப்பின் படி ,மொத்த வடக்கு டகோட்டா மாநிலத்திலும் வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைகழகமே மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.இதன் வருடாந்த ஆராய்ச்சி செலவினங்கள் கிட்டத்தட்ட 134 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும் .பிரதான ஆராய்ச்சி துறைகளாக நானோ தொழில்நுட்பம்,வானொலி-அலைவரிசை அடையாளப்படுத்துதல் (R -FI)தொழில்நுட்பம் ,இரசாயனவியல் மற்றும் பல்லுறுப்பி(பாலிமர் )/பூச்சு என்பன விளங்குகின்றன . 55 ஏக்கர் (223,000 சதுர மீட்டர்) பரப்பளவு கொண்ட தொழில்நுட்ப பூங்கா பிரதான வளாகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது.

சர்வதேச மாணவர்கள்[தொகு]

வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைகழகம் கணிசமான அளவு சர்வதேச மாணவர்களைக் வருடாந்தம் கல்லூரிக்கு அனுமதிக்கின்றது.இதன் சர்வதேச நிகழ்ச்சி பிரவின் அறிக்கைப்படி 2012 வசந்த அரையிறுதி (Spring Semester ) சர்வதேச மொத்த மாணவர்தொகை 1214 ஆகும்.சீனா ,இந்தியா,கொரியா,நேபால் ,மலேசியா பிரேசில் ,நோர்வே , ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்தே அதிக மாணவர்கள் வருடாந்தம் இங்கு வருகிறார்கள் .இதன் பிரதான சர்வதேச மாணவர் அலுவலகம் நினைவு ஒன்றிய (Memorial Union ) கட்டடத்தில் அமைந்துள்ளது