ஒளி வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒளி வேதியியல் (Photo chemistry) என்பது ஒளியின் வேதி விளைவுகளைப் பற்றிய வேதியியலின் ஒரு பிரிவாகும். பொதுவாக, இது புறவூதாக் கதிர்கள் (அலைநீளம் 200 முதல் 400 நானோமீட்டர்), கட்புலனாகும் ஒளி (400 முதல் 750 நானோமீட்டர்) அல்லது அகச்சிவப்புக் கதிர்கள் (750 முதல் 2000 நானோமீட்டர்) போன்றவை உட்கவரப்படுவதால் நடைபெறும் வேதி விளைவுகளைப் பற்றி விளக்குகிறது.[1] இவ்வகை வேதிவினைகள் ஒளி வேதி வினைகள் (photo chemical reactions) எனப்படுகின்றன.

ஒளிவேதி வினைகள் வெப்ப வினைகளில் இருந்து வேறுபடுவதால் இவை கனிம மற்றும் கரிம வேதியியலில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு வெப்ப வினைகளுக்கும் அவற்றிற்கிணையான ஒளி வினைகள் உள்ளன. ஒளிச்சேர்க்கை, நெகிழி (பிளாசுடிக்) மட்குதல் மற்றும் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி உருவாதல் ஆகியவை தினசரி நிகழ்வில் ஒளி வேதி வினைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

உசாத்துணை[தொகு]

  • principle of physical chemistry--Puri, sharma and pathania
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_வேதியியல்&oldid=1825275" இருந்து மீள்விக்கப்பட்டது