உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்களிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Pretend ballot Panamanian referendum ballot Voting box in the 2007 French presidential election
Greek Parthenon Purple ink on an Afghan voter's finger
Women voting in Bangladesh Voting place indicator, United States

Electoral campaign posters in Milan, Italy

வாக்களிப்பு என்பது, பலர் கூடியுள்ள இடத்தில், முடிவு எடுப்பதற்கான அல்லது ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். மேற்குறிப்பிட்ட இடம் ஒரு கூட்டமாகவோ, ஒரு தேர்தல் தொகுதியாகவோ, முழு நாடாகவோ இருக்கலாம். வாக்களிப்பு பொதுவாகக் கலந்துரையாடல்கள், விவாதங்கள் அல்லது பரப்புரைகளுக்குப் பின்னர் இடம்பெறுகின்றது. மக்களாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிப்பின் மூலமே தெரிவுசெய்யப்படுகின்றனர்.

அரசியலில் வாக்களிப்பு

[தொகு]

மக்களாட்சிகளில் நாட்டின் அரசாங்கம் ஒரு தேர்தலில் மக்கள் வாக்களிப்பதன் மூலமே தெரிவுசெய்யப்படுகிறது. இம்முறையில், பல வேட்பாளர்களில் இருந்து ஒருவரை மக்கள் தேர்ந்தெடுப்பர். பிரதிநிதித்துவ மக்களாட்சியில் ஒரு குறித்த தேர்தல் தொகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியில் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்வது வாக்களிப்பு மூலமே. நேரடி மக்களாட்சியில் தீர்மானங்களை எடுப்பதற்கு மக்கள் நேரடியாகவே வாக்களிப்பர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்களிப்பு&oldid=2950510" இலிருந்து மீள்விக்கப்பட்டது