வசந்த் ராய்
வசந்த் ராய் | |
---|---|
பிறப்பு | 1942 |
பிறப்பிடம் | இந்தியா |
இறப்பு | 1985 (வயது 43) நியூயார்க்கு நகரம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
இசை வடிவங்கள் | இந்தியப் பாரம்பரிய இசை |
இசைக்கருவி(கள்) | சரோத் |
வசந்த் ராய் (Vasant Rai) (1942-1985) இவர், இந்திய இசையில் உலகின் மிகவும் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராக இருந்தார். மேலும் சரோத் என்ற இந்தோ-ஆப்கானிய கருவியை வாசித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையும், கல்வியும்
[தொகு]இவர் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். ரவிசங்கரின் ஆசிரியராக நன்கு அறியப்பட்ட பாபா அலாவுதீன் கானின் கடைசி மாணவராக இருந்தார். அமெரிக்காவின் கார்னகி அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் தனது நியூயார்க்கு நகரத்தில் இறந்தார். [1]
தொழில்
[தொகு]இவர் தனது சிறுவ்யதிரேயே அமெரிக்கா சென்று, 1969 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் குடியேறினார். முக்கியமாக கிரீன்விச் கிராமப் பகுதியிலும், சுற்றுப்பயணம் செய்யாதபோது செல்சியா விடுதியிலும் சிறிது காலம் வாழ்ந்தார். 1969 முதல் 1985 வரை கிரீன்விச் கிராமத்தில் ஆலம் என்ற இசைப்பள்ளியை நடத்தினார். அல்லா ரக்கா, மகாபுருசு மிசுரா, சம்தா பிரசாத், சாகீர் உசைன் போன்ற தபலா கலைஞர்களுடன் உடன் சென்றார். இவர், இந்திய இசைக்கலைஞர்களுக்கு கற்பித்த்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக சரோத் இசைக்கலைஞர் பிரதீப் பரோட், மாண்டலின் கலைஞர் ஈமு தேசாய், சித்தார் கலைஞர் சமிம் அகமது கான் போன்றவர்கள் அடங்குவர். குறிப்பிடத்தக்க மேற்கத்திய இசைக்கலைஞர்களான லெக்ஸ் ஹிக்சன், கொலின் வால்காட், டான் செர்ரி போன்றவர்களுக்கும் கற்பித்தார்.
இவர், 1975 முதல் 1982 வரை வான்கார்ட் ரெக்கார்ட் என்ற இசைத்தட்டு நிறுவனத்தின் மூலம் பிரத்தியேகமாக தனது இசை நிகழ்ச்சிகளை வெளியிட்டார். இவர் வாசிக்கும் சரோத் கருவி இவரது குரு அல்லாவுதீன் கானின் பரிசாகும்., இது 1930 களில் அல்லாவுதீன் கானின் தம்பி அயித் அலிகானால் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vasant Rai biography and interview". Raga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-04.