உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேச புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தின் புவியியல் வரைபடம்

வங்காளதேச புவியியல் என்பது வங்காளதேசம் நாட்டின் புவியியல், காலநிலை மற்றும் இயற்கை அமைப்பை குறிக்கிறது. வங்காளதேசமானது வங்காள விரிகுடா கடலின் வடக்கு கரையோரம் அமைந்துள்ளது. 580 கிமீ (360 மைல்) நீள சதுப்பு நிலக்காடுகள் கொண்ட கடற்கரையோடு தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு தாழ்வான, ஆற்றுப்படுகைகள் கொண்ட நாடு. கங்கை (பத்மா), பிரம்மபுத்திரா (ஜமுனா) மற்றும் மேக்னா ஆறுகள் தங்கள் கிளை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் முகத்துவார சமவெளியால் வங்காளதேசத்தின் பெரும்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. வளமிக்க வண்டல் மண் கொண்ட பகுதியாக இருப்பினும் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் வங்காளதேசம் உள்ளது. சிட்டகாங் உயர்நிலப்பகுதி தென்கிழக்கிலிருந்து வட மேற்கில் ஷைல்ஹெட் பிரிவு வரை உள்ளது. இதனை கடக ரேகை பிரிக்கிறது. பருவகால மழை, அதிக வெப்பம், மற்றும் அதிக ஈரப்பதம் கொண்ட ஒரு வெப்பமண்டல பருவமழை காலநிலை வங்காளதேசத்தில் நிலவுகிறது. இங்கு சராசரியாக 16 முறை, முக்கிய சூறாவளிகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டது. மே 1991 தென்கிழக்கு கடலோரப் பகுதியை தாக்கிய ஒரு சூறாவளியால் 136,000 பேர் இறந்தனர். நவம்பர் 15, 2007 அன்று தென்மேற்கு கடலோரப் பகுதியை தாக்கிய சிடிர் புயல் கடலோர குல்னா நிர்வாக பிரிவு மாவட்டங்களை மட்டுமல்லாமல் வெப்பமண்டல சுந்தரவனக்காடுகளையும் பாதித்தது.[1]

புவியியல் அமைப்பு

[தொகு]
வங்காளதேசத்தின் இயற்கை அமைப்பை விளக்கும் காணொலி.[2]
நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த வங்காளதேசத்தின் இயற்கை அமைப்பு படம் (பெருதுபடுத்தி பார்க்க படத்தின் மீது சொடுக்கவும் )

வங்காளதேசம் மாறுபட்ட புவியியல் அமைப்பைக் கொண்டது. தனித்துவமான அம்சங்களால் அது இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது வெள்ளம் ஏற்படும் ஒரு பரந்து விரிந்த கழிமுகச் சமவெளி மற்றும் விரைவாக குறுக்கிடும் ஆறுகள் கொண்ட ஒரு உயர்ந்த மலைப்பகுதி ஆகும். 147.610 சதுர கிலோமீட்டர் மொத்த பரப்பளவு கொண்ட இந்த நாடு வடக்கு தெற்காக 820 கிலோமீட்டர் நீளமும் மற்றும் கிழக்கு-மேற்கில் 600 கிலோமீட்டர் நீளத்திற்கும் பரவியுள்ளது. இது மேற்கு, வடக்கு, கிழக்கு எல்லைகளை 4,095 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தியாவுடன் பகிர்ந்துள்ளது. தென்கிழக்குப் பகுதியில் சிறு தொலைவிற்கு (193 கிலோ மீட்டர்) பர்மாவுடன் (மியான்மர்) பகிர்ந்துள்ளது.

மக்கட்புவியியல்

[தொகு]

விரைவாக ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் வங்கதேசத்தில் 30% தொழிலாளர்கள் மட்டுமே எதிர்காலத்தில் விவசாயத் தொழிலில் இருக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மீதமுள்ளவர்கள் கிராமப்பகுதிகளில் வேறு வகையான வேலைகளில் ஈடுபடக்கூடும். நாட்டின் தலைநகர் தாக்கா மற்றும் காமிலா மிகுந்த மக்கள் நெருக்கமுள்ள நகரங்களாக திகழ்கின்றன. தென்கிழக்கில் பர்மா மற்றும் இந்திய எல்லையில் அமைந்த சிட்டகாங் மலைப்பகுதி மக்கள் நெருக்கம் குறைந்த பகுதியாகும்.

காலநிலை

[தொகு]

வங்காளதேசத்தில் வெப்பமண்டல பருவகாலநிலை நிலவுவதால் மழை, உயர் வெப்பநிலை, மற்றும் உயர் ஈரப்பதம் போன்றவற்றில் மாறுபாடுகள் காணப்படுகிறது.பொதுவாக மூன்று வகையான காலநிலை நிலவுகிறது. மார்ச் முதல் ஜூன் வரை வெப்பமான கோடை காலமும், ஜூன் முதல் நவம்பர் வரை வெப்பமான ஈரப்பதம் கொண்ட மழைக் காலமும், திசம்பர் முதல் பிப்ரவரி வரை உளர்ந்த குளிர் காலமும் நிலவுகிறது. பொதுவாக உயர்ந்தபட்ச வெப்பநிலை 38-41 டிகிரி செல்சியஸ் (100.4-105.8 °F). நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதம் ஏப்ரல். ஜனவரி குளிரான மாதமாக உள்ளது. நாட்டின் பெரும்பாலான சராசரி பகல்பொழுது வெப்பநிலை 16-20 டிகிரி செல்சியஸ் (61-68 °F) இரவில் 10 டிகிரி செல்சியஸ் (50 °F) வெப்பநிலை காணப்படுகிறது.[3][4]

ஆறு அமைப்புகள்

[தொகு]
கங்கை ஆற்று கழிமுகம், வங்காளதேசம் மற்றும் இந்தியா

வங்காளதேச மக்களின் வாழ்க்கை முறைகளிலும் புவியியல் அமைப்பிலும் இங்கு பாயும் ஆறுகள் முக்கிய பங்காற்றுகின்றன. மொத்தம் 700 ஆறுகள் பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. பெரும் நதிகள் விவசாய சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், வர்த்தகப் போக்குவரத்துக்கான உயிர் நாடிகளாகவும் விளங்குகின்றன. புரத ஆதாரமான மீன்களையும் இந்த ஆறுகள் பெருமளவில் தருகின்றன. பருவமழையின் போது ஆறுகளில் வெள்ளச் சீற்றத்தால் எண்ணிலடங்கா சிரமங்கள் ஏற்பட்டு நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது. இருப்பினும் வளமிக்க வண்டல் சேர்வதால் மண்வளம் கூடுகிறது. வங்கதேசத்தில் காணப்படும் ஆற்று அமைப்பை ஐந்தாகப் பிரிக்கலாம்.

  1. ஜமுனா பிரம்மபுத்திரா
  2. பத்மா- கங்கை
  3. சுர்மா-மேக்னா
  4. மிகுந்த வலைபின்னல் அமைப்பை கொண்ட பத்மா- மேக்னா
  5. மேற்கண்ட நான்கிற்கும் தொடர்பற்ற கர்னபுஹுலி

பரப்பளவு மற்றும் எல்லைகள்

[தொகு]

பரப்பளவு:

மொத்தம்: 143.998 சதுர கிமீ உலக நாட்டின் ஒப்பீடு: 95 நிலம்: 130.168 சதுர கிமீ தண்ணீர்: 13.830 சதுர கிமீ

நில எல்லைகள்: மொத்தம்: 4.413 கி.மீ. எல்லை நாடுகளில்: மியான்மார் 271 கி.மீ., இந்தியா 4.142 கி.மீ. கடலோரம்: 580 கி.மீ.

கடல்சார் கூற்றுக்கள்: பிராந்திய கடல்: 12 NMI (22.2 கிமீ; 13.8 மைல்) அடுத்தடுத்திருக்கும் மண்டலம்: 18 NMI (33.3 கிமீ; 20.7 மைல்) பிரத்தியேக பொருளாதார வலயம்: 200 NMI (370.4 கிமீ; 230,2 மைல்) கண்ட மேடை: கண்டத்திட்டின் வெளிப்புற எல்லைகளை வரை

வளங்கள் மற்றும் நிலம் பயன்பாடு

[தொகு]

இயற்கை வளங்கள்: இயற்கை எரிவாயு, விளைநிலம், மரம், நிலக்கரி

நிலப் பயன்பாடு: விவசாயம்: 58,96% நிலையான பயிர்: 6.53% மற்றவை: 34,51% (2012)

பாசன நிலம்: 50,000 சதுர கிமீ (2008)

மொத்த புதுப்பிக்கத்தக்க நீர் வளங்கள்: 1,227 கிமீ (2011)

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://reliefweb.int/report/bangladesh/cyclone-sidr-bangladesh-damage-loss-and-needs-assessment-disaster-recovery-and
  2. நாசா/Goddard Space Flight Center, Scientific Visualization Studio (2002-04-18). "Himalayas Exaggerated (version 2.2)" (MPEG). பார்க்கப்பட்ட நாள் 2007-04-30.
  3. http://www.weatheronline.co.uk/reports/climate/Bangladesh.htm
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-26. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.

மேலும் படிக்க

[தொகு]

Rashid, Haroun Er (1991). Geography of Bangladesh. Dhaka, Bangladesh: University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 984-05-1159-9.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_புவியியல்&oldid=4181523" இலிருந்து மீள்விக்கப்பட்டது