உள்ளடக்கத்துக்குச் செல்

லிட்டன் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வர்ட் ராபர்ட் புல்வர் லிட்டன் பிரபு

லிட்டன் பிரபு (Edward Robert Lytton Bulwer-Lytton, 1st Earl of Lytton), (நவம்பர் 8, 1831நவம்பர் 24, 1891), ஐக்கிய இராச்சியத்தை சார்ந்த ராஜதந்தரியும் கவிஞருமான லிட்டன் பிரபு, பிரித்தானியா இந்தியாவில், 1876 முதல் 1880 முடிய இந்திய வைஸ்ராயாகப் பணியாற்றிவர். நார்த் ப்ரூக் பிரபு என்பார் ,ஆப்கானிஸ்தானில் தலையிட கொள்கையை கடைப்பிடித்து வந்ததால் பிரதமர் டிஸ்ரேலி தனது பேச்சை கேட்கும் லிட்டன் பிரபுவை இந்திய வைசிராயாக நியமித்தார் . அப்போது இவர் காலத்தில் இயற்றப்பட்ட சில சட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் அமுல் படுத்தப்பட்டு வருகின்றன .[1][2]

பிரதேச மொழி பத்திரிக்கை சட்டம்

[தொகு]

ஆங்கிலம் அல்லாத பிராந்திய மொழிகளில் வெளிவரும் பத்திரிகைகள் ஆப்கானிய கொள்கையில் தலையீடு செய்வதை கண்டித்து எழுதின .இந்த சட்டம் மூலம் அவை கட்டுப்படுத்தப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்டவை களில் ஒன்று அமிர்த பஸார் .இதை அடுத்து கிளர்ச்சிகள் தோன்றின

இந்திய படைக்கலன் சட்டம்

[தொகு]

இந்தியர்கள் உத்தரவின்றி படைக்கலன்களை ஏந்த அனுமதி மறுக்கப் பட்டது .ஆனால் ஐரோப்பியர்களுக்கு இச்சட்டம் விலக்களித்தது

அரசப்பட்டங்கள் சட்டம்

[தொகு]

இந்த சட்டப்பிரகாரம் ஆங்கிலேய அரசுக்கு கைஸரி -ஹிந்த் என்ற பட்டம் அளிக்கப்பட்டது

இந்தியப்பேரரசி ஆன விக்ட்டோரியா மஹாராணி

[தொகு]

இதன் படி இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவை 1877 ஜனவரி முதல் தேதி முதல் இந்திய பேரரசியாக அறிவித்தார் லிட்டன் பிரபு

அலிகார் பல்கலைக்கழகம்

[தொகு]

இவர் காலத்தில் அலிகாரில் முகமதிய -ஆங்கில கீழை நாட்டு கல்வி ஒன்று நிறுவப்பெற்றது .இதுவே இன்றைய அலிகார் பல்கலைக்கழகம் ஆயிற்று .

பஞ்சமும் ,உயிர் இழப்பும்

[தொகு]

அவர் பதவிஏற்றபோது இந்தியாவில் 1876-78 ஆண்டில் சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78 மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் காணப்பட்ட அரசியல் பதட்டங்களும் பிரித்தானியர்களுக்கு பெரும் கவலையை அளிப்பதாக இருந்தன.1876-78 ல் சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78 தலைவிரித்தாடியது. 2,50,000 சதுர மைல்கள் பரப்பில் வாழ்ந்த 58 மில்லியன் மக்கள் இந்த பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டனர்.ஒரே ஆண்டில் 5 மில்லியன் மக்கள் மடிந்தனர். பின் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் முதலாவது பஞ்சக்குழு (1878-80) ஏற்படுத்தப்பட்டது.

பஞ்ச ஆய்வு குழு அறிக்கை

[தொகு]

1.ஏழை எளியோர்க்கு வேலையும் ,கூலியும் தரப்பட வேண்டும் . 2.வேலை செய்ய முடியாதோர்க்கு உதவி தொகை அளிக்க வேண்டும் 3 .பஞ்ச நிவாரணத்திற்கு வருடம் ௧,௫௦,௦௦,௦௦௦ ஒதுக்கப்பட வேண்டும் 4. நெடுஞ்சாலை போடுதல் ,கால்வாய் வெட்டுதல் ,ரயில் பாதை அமைத்தல் மூலம் நாட்டை வளப்படுத்தல்

இரண்டாம் ஆப்கானிய போர் 1878-1880

[தொகு]

லிட்டன் பிரபு ஆப்கானிய அமீர் ஷேர் அலிக்கு அவர் அவையில் பிரித்தானிய சார்பாக ஒரு பிரதிநிதி நியமிக்க வற்புறுத்தினார் .அப்போது ரஷ்யாவும் தனது பிரதிநிதியை ஏற்றுக்கொள்ள ஷேர் அலி வற்புறுத்தப்பட்டார் . ஆனால் அந்நிய தலையீட்டை அலி விரும்ப வில்லை .எனவே 1878 இல் லிட்டன் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தார் . அரசர் ஷேர் அலி துருக்கிக்கு ஓடி அங்கேயே இறந்தார் .பின்னர் கண்டமாக் உடன்படிக்கை ஏற்பட்டு , சர் லூயி காவ கனாயி என்ற ஆங்கிலேயர் அனுப்பி வைக்கப்பட்டார் .அவரை கொலை செய்துவிடவே ,லிட்டன் பிரபு காந்தகாரையும்,காபூலையும் கைப்பற்றினார் .இத்தருவாயில் டிஸ்ரேலி அமைச்சர் அவை இங்கிலாந்தில் வீழ்ந்தது .அவருக்கு நேர் மாறான கிளாட்ஸ்டன் இங்கிலாந்தின் பிரதமர் ஆகவும் ,லிட்டன் பிரபு பதவி விலகினார். அடுத்து வந்த வைஸ்ராய் ரிப்பன் பிரபு . இவரால் இந்தியாவிற்கு அநேக நன்மைகள் ஏற்பட்டன .[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Robert Bulwer-Lytton, 1st earl of Lytton
  2. Personal & literary letters
  3. indian history ,written by N.subramaniam,M.A.Phd
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிட்டன்_பிரபு&oldid=3925656" இலிருந்து மீள்விக்கப்பட்டது