உள்ளடக்கத்துக்குச் செல்

ராசேந்திரபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசேந்திரபுரம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,528
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

இராசேந்திரபுரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும். இது அறந்தாங்கி வருவாய் மாவட்டத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் இசுலாம் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு நைனாமுகம்மது மகளிா் கலை அறிவியல் கல்லூரி, எம்.எஸ். பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை உள்ளன.[1][2]

இராசேந்திரபுரம் ஊராட்சியின் ஊர்கள்

[தொகு]
  1. எருக்கலக்கோட்டை
  2. இராஜேந்திரபுரம்
  3. காக்காக்காடு
  4. புதுக்குடியிருப்பு
  5. குருந்திரக்கோட்டை

புள்ளிவிபரம்

[தொகு]

2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மொத்த மக்கள்தொகை 3528 பேர் ஆகும். அதில் ஆண்கள் 1768 பேர், பெண்கள் 1760 பேர். மொத்த மக்கள்தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் 2107 பேர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Village Boundary Map". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011.
  2. http://www.voiceofbharat.org/Village_Details.aspx?ID=553727[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசேந்திரபுரம்&oldid=4102557" இலிருந்து மீள்விக்கப்பட்டது