உள்ளடக்கத்துக்குச் செல்

மிகையழுத்த உருக்கியிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கியாளர் உருக்கிணைத்தலில் ஈடுபட்டுள்ளார்.
நீருக்கடியில் உருக்கிணைத்தல்

மிகையழுத்த உருக்கியிணைப்பு (hyperbaric welding) என்பது உயர்ந்த அழுத்தங்களில் நடத்தப்படும் உருக்கியிணைப்பு முறை. இது பொதுவாக நீருக்கடியில் நடத்தப்படும் ஒரு செயல்முறையாகும்.[1][2] மிகையழுத்த உருக்கியிணைப்பு பொதுவாக நீருக்கடியில் ஈரத்தன்மையுள்ள சூழலில் நடத்தப்படலாம், அல்லது நீருக்கடியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நேரழுத்த உறையினுள்ளே "உலர்" சூழலில் நடத்தப்படலாம். பெரும்பாலும் நீருக்கடியில் உலர் சூழலில் பயன்படுத்தப்படும் போது மிகையழுத்த உருக்கியிணைப்பு என்றும், ஈரமான சூழலில் நடத்தப்படும் போது நீருக்கடியில் உருக்கியிணைப்பு (underwater welding) என்றும் அழைக்கப்படுகிறது. மிகையழுத்த உருக்கியிணைப்பு கப்பல்கள், கரையோர எண்ணெய்த் தளங்கள், குழாய்கள், போன்றவற்றைத் திருத்துவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. உருக்கியிணைப்பதற்கு எஃகு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மிகையழுத்த உருக்கியிணைப்பு 1932 ஆம் ஆண்டில் உருசிய உலோகவியல் வல்லுநர் கொன்ஸ்டன்டீன் கிரெனோவ் என்பவரால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Keats, DJ (2005). Underwater Wet Welding - A Welder's Mate. Speciality Welds Ltd. p. 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-899293-99-X.
  2. Cary, HB and Helzer, SC (2005). Modern Welding Technology. Upper Saddle River, New Jersey: Pearson Education. pp. 677–681. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-113029-3.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)