உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா லூயிசா அல்கர்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியா லூயிசா அல்கர்ரா ( María Luisa Algarra ) ( 1916 பார்சிலோனா - 1957 மெக்சிக்கோ நகரம்) ஒரு எசுப்பானிய நாடகாசிரியர் ஆவார். எசுப்பானிய உள்நாட்டுப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மெக்சிகோவிற்கு புலம்பெயர்ந்த இவர் பின்னர் எழுத்தாளாரானார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

மரியா லூயிசா அல்கர்ராமுதலில் உள்ளூர் பள்ளிகளில் படித்தார். பின்னர் பார்சிலோனாவின் தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் படித்தார். இருபது வயதில் இவர் சட்டப் பட்டம் பெற்றார். அந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு இது மிகவும் அரிதான நிகழ்வு.[1] எசுப்பானிய உள்நாட்டுப் போரின் முடிவில் (1936-1939) இவர் பிரான்சுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இரண்டாம் உலகப் போரின் போது எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவினார். இதன் விளைவாக வெர்னெட் வதை முகாமில் மூன்று வருட சிறைவாசம் விதிக்கப்பட்டது. விடுதலையானதும், இவர் ஐரோப்பாவை விட்டு வெளியேறி மெக்சிகோவில் நிரந்தரமாக வசித்து வந்தார். அங்கு பிரபல ஓவியரான ஜோஸ் ரெய்ஸ் மேசா என்பவரைச் சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரெய்ஸ் மற்றும் பெர்னாண்டா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். மேலும் இவர் சக நாடக ஆசிரியரான மெக்சிகன் எமிலியோ கார்பலிடோ என்பவருடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தா.[2] மரியா 1957 இல் தனது 41 வயதில் இறந்தார்.

பணிகள்

[தொகு]

அல்கர்ரா ஒரு நாடக ஆசிரியராக அறியப்பட்டார். இருப்பினும் திரைப்படம்,[3] தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கும் கதைகளை எழுதினார் . இவரது அசல் படைப்புகளுடன், செர்வாண்டசின் லா கியூவா டி சலமன்கா மற்றும் ஜுவான் ரூயிஸின் லா வெர்டாட் சோஸ்பெச்சோசா ஆகியவற்றின் நாடகத் தழுவல்களையும் எழுதினார்.[4] இவரது பல நாடகங்கள் இவரது வாழ்நாளில் தயாரிக்கப்பட்டாலும், இவரது நூல்கள் இவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட நாடகங்கள் பல்வேறு நாடக வெளியீடுகளில் இடம்பெற்றன. மேலும் ஒரு முழுமையான தொகுப்பை 2008 இல் மெக்சிகன் பதிப்பகமான யுனிவர்சிடாட் வெராக்ரூஸ் வெளியிட்டது. இவரது நாடகங்கள் பெரும்பாலும் ஒரு பெண் கதாநாயகியைச் சித்தரிக்கின்றன. மேலும் சமூகத்தில் பெண்களின் நிலைமை, குடும்ப மோதல், நட்பு, நாடு கடத்தல் மற்றும் காதல் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களைக் கையாளுகின்றன. அல்கர்ரா இந்த கருத்துகளில் பலவற்றை உளவியல் கண்ணோட்டத்தில் கையாண்டுள்ளார்.[5] இவரது சில படைப்புகள் மெக்சிகோவின் குறிப்பிட்ட சிக்கல்கள் அல்லது நாடுகடத்தப்பட்ட தனது சொந்த அனுபவத்தைக் கொண்டுள்ளன.[6] மற்றவை உலகளவில் பொருந்தக்கூடிய சிக்கல்களைக் கொண்டுள்ளன.

வரவேற்பு

[தொகு]

அல்கர்ராவின் நாடகங்கள் பொதுவாக இவரது சமகாலத்தவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 1935 ஆம் ஆண்டில் இவர் காட்டலான் மொழியில் எழுதப்பட்ட ஜூடித் என்ற தனது முதல் நாடகத்திற்காக பார்சிலோனாவில் உள்ள யுனிவர்சிடாட் ஆட்டோனோமாவிடமிருந்து கன்கர்சல் டீட்ரல் யுனிவர்சிடேரியோ விருதைப் பெற்றார். மேலும் 1954 ஆம் ஆண்டில் இவர் "மாக்ஸிமோ ரெகோனோசிமென்டோ என் எல் டீட்ரோ மெக்சிகானோ" (மெக்சிகன் அங்கீகாரம்) பெற்றார். [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stroll, 22
  2. Carballido, 7
  3. imdb.com, keyword Maria Luisa Algarra
  4. Heras Gonzalez, 335
  5. Maria y Campos cited in Heras Gonzalez, 335
  6. Carballido, 9
  7. Heras Gonzalez, 335

மேற்கோள் நூல்கள்

[தொகு]
  • Carballido, Emilio. “Prólogo.” Antología de obras dramáticas / María Luisa Algarra. Veracruz: Universidad Veracruzana, 2008.
  • Heras González, Juan Pablo. “María Luisa Algarra, una autora de exilio: trayectoria dramática.” Signa 15 (2006): 325-339.
  • Huerta Calvo, Javier, Emilio Peral Vega, and Héctor Urzáiz Tortajada. Teatro español [de la A a la Z]. Madrid: Espasa Calpe, 2005.
  • The Internet Movie Database. 2009. 26 September 2009 <https://www.imdb.com/>.
  • María y Campos, A. de. Veintiún años de crónica teatral en México, I. Primera parte (1944–1950); II. Segunda Parte (1951–1955). México: INBA-CITRU-IPN, 1999.
  • Stroll, Anita K. Dictionary of Mexican Literature. Ed. By Eladio Cortés. West Port, CT: Greenwood Publishing, 1992.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_லூயிசா_அல்கர்ரா&oldid=3896981" இலிருந்து மீள்விக்கப்பட்டது