உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரகவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரகவி என்பது கவிதை புனையும் புலமையை வெளிப்படுத்தும் ஒரு பாங்கு. ஆசுகவி, மதுரகவி சித்திரக் கவி, வித்தார கவி என்னும் நான்கு வகைப் புலமைகளில் பலர் சிறப்புற்று விளங்கிய புலமைநெறி மதுரகவி.

பொருள்வளமும், சொல்வளமும் உடையதாய், பல்வேறு வகையான தொடைநலன்கள் அமையப்பெற்று, உருவகம் முதலான அணி நயங்கள் பொலிந்து வர, ஓசைநயம் கொண்டதாய், கற்போருக்கு அமிழ்தம் போல அமைந்திருப்பது மதுரகவி. சொல்லப்பட்ட பலவகையான இன்பங்கள் தந்து மயங்கவைக்கும் மது இது. [1]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பொருளின் பொலிவும், சொல்லின் செல்வமும்,
    தொடையும், தொடைக்கண் விகற்பமும் துதைந்து,
    உருவகம் முதலா அலங்காரம் உட்கொண்டு,
    ஓசை பொலிவுற்று, உணர்வோர் உளம் கட்கும்
    மாகடல் அமிழ்தம் போல்பாடுதல் மதுரகவி (திவாகர நிகண்டு பகுதி 12)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரகவி&oldid=3169906" இலிருந்து மீள்விக்கப்பட்டது