சித்திரக் கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரக் கவி, அட்ட நாக பந்தம், தமிழழகன் பாடலும் படமும், பாடல் "பாரதிக் கெல்லை பாருக்குள்ளே இல்லை" கருத்து - கலைக்கு எல்லை கற்பனையே

சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் சித்திரக் கவிகளின் தோற்றுவாய். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் அமைத்துள்ளார். இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும் சித்திரக்கவிகள் படைத்துள்ளார்.

விளக்கம்[தொகு]

எல்லா பொருள்களும் முழுமையுர உணரும் பரஞானம் வாய்ப்பதற்காக அருளப் பட்டவை சித்திரக்கவிகள்" என்று சேக்கிழார் கூறியுள்ளார் (பெரிய புராணம் 2179 & 2180). பாடுபவரின் மொழிபுலமை மற்றும் மொழியின் செழுமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்படி அமைந்தவை சித்திரக்கவிகள் என்பது ஆய்வலர் முடிவு. தமிழ் தவிர பிற மொழிகளில் இந்த கவி அமைப்பு கிடையாது என்று கருதப்படுகிறது.

சில வகையான சித்திரக் கவிகள்[தொகு]

பாம்பன் சுவாமிகள்[தொகு]

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இராமேசுவரம் அருகில் உள்ள பாம்பன் என்னும் ஊரில் சாத்தப்பிள்ளை - செங்கமல அம்மாள் ஆகியோருக்கு 1853 (தோரயமாக) பிறந்தவர். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது படல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். அவர் பிரப்பன்வலசை என்ற ஊரில் 35 நாட்கள் கடுந்தவம் புரிந்து முருகப்பெருமானிடம் நேரில் உபதேசம் பெற்றதாக நம்பப்படுகிறது.. உபநிஷத்துகளிலும், சிவாகமங்களிலும் கூறப்பட்டுள்ள சந்நியாச விதிமுறைகளை தவறாது கடைப்பிடித்தர். அவர் இயற்றிய படல்களின் எண்ணிக்கை 6666. இவற்றை 6 மண்டலங்கலாக வகுத்துள்ளார். வடசொல் கலவாது, தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு " சேந்தன் செந்தமிழ்" என்னும் நூலையும் எழுதி உள்ளார் [1]. பாம்பன் சுவாமிகள் இயற்றிய 6 மண்டலங்களில் 2வது மண்டலத்தைச் சேர்ந்த திருவலங்கற்றிரட்டு 2ம் காண்டம் முழுவதும் நான்கு வகைப் பாக்களையும் அவற்றின் பாவினங்களையும் யாப்பிலக்கண ஐயங்களை போக்குமாறு முருகப்பெருமானை பாடுபொருளாகக் கொண்டு உதாரணச் செய்யுட்களாகப் பாடப்பெற்றவையாகும். இவற்றுள் வெள்ளியல், ஆசிரியவியல், கலியியல், வஞ்சியியல், எனும் நான்கு செய்யுட் பிரிவுகளிலும் எண்ணற்ற சித்திரக்கவிகள் பாடியுள்ளார். 4ம் மண்டலத்தைச் சேர்ந்த பத்து பிரபந்தம் முழுவதுமே சித்திரக்கவிகளாக அமைத்து பாடியுள்ளார். சித்திரக்கவிகளுக்கு உள்ளே பல சித்திரக்கவிகளை அமைத்து விசித்திரக்கவிகளாக இயற்றியுள்ளார் [2]. சந்தங்களும் அமைதுள்ளார்.எடுத்துக்காட்டாக சஸ்த்ர பந்த்ம், மயூர பந்தம், கமல பந்தம், மாலைமாற்று, காதை கரப்பு, இரத பந்தம், சதுரங்க பந்தம், ஒற்றிலாச் சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அந்தாதித் தொடை நான்காரைச் சக்கரம், நாற்கூற்றிருக்கை, துவிதநாக பந்தம் என பல வகைகள் ஆய்வாளர்களுக்கு பொக்கிஷமாக உள்ளன. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை - திருவான்மியூரில் உள்ளது.

துணை நூல்கள்[தொகு]

  • 1)முதல் மண்டலமகிய குமரகுருதாச சுவாமிகள் பாடல், 1986, பாம்பன் மெர்கண்டைசர்ஸ் வெளியீடு
  • 2)சித்திரக்கவிகள், 1998, பங்கஜம் பதிப்பகம் வெளியீடு

அடிக்குறிப்பு[தொகு]

  1. (சபாரத்தினம்,1986)
  2. (இராமன், 1998)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரக்_கவி&oldid=3338531" இலிருந்து மீள்விக்கப்பட்டது