போரசைட்டு
போரசைட்டு | |
---|---|
போரசைட், கனிமவியல் அருங்காட்சியகம், பான் | |
பொதுவானாவை | |
வகை | டெக்டோ போரேட்டுகள் |
வேதி வாய்பாடு | Mg3B7O13Cl |
இனங்காணல் | |
மோலார் நிறை | 392.03 g |
நிறம் | நிறமற்றது, வெண்மை, சாம்பல், பழுப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெளிர் பச்சை, அடர் பச்சை, நீலம் கலந்த பச்சை, அல்லது நீலம் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. |
படிக இயல்பு | படிகங்கள்,படிகப்பரவல் |
படிக அமைப்பு | சாய்சதுரம் - போலி கனசதுரம்,பட்டைக்கூம்பு |
இரட்டைப் படிகமுறல் | அரிதாக ஊடுறுவல் படிகயிருமை |
பிளப்பு | இல்லை |
முறிவு | ஒழுங்கற்றது/சமமற்றது, சங்குருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 7 - 7.5 |
மிளிர்வு | கண்ணாடி - நிலையானது |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | துணை ஒளி ஊடுறுவும் நிலையில் இருந்து ஒளிகசியும் நிலை |
ஒப்படர்த்தி | 2.95 |
அடர்த்தி | 2.91 - 3.10 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα=1.658 - 1.662, nβ=1.662 - 1.667, nγ=1.668 - 1.673 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.010–0.011 |
பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
2V கோணம் | 82° |
நிறப்பிரிகை | 0.024 (வலிமையற்றது) |
புறவூதா ஒளிர்தல் | இல்லை |
கரைதிறன் | மிக மெதுவாக் H2O கரையும்; மெதுவாக ஆனால் முழுமையாக HCl காடியில் கரையும். |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
போரசைட்டு (Boracite ) என்பது Mg3B7O13Cl என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய மக்னீசியம் போரேட் எனப்படும் கனிமப் பொருளாகும். சாய்சதுரப் பட்டைக்கூம்பு வடிவத்துடன் நீலம் கலந்த பச்சை, மஞ்சள் கலந்த வெண்மை, சாம்பல் நிறம், நிறமற்றது போன்ற தோற்றங்களிலும், போலி இணையளவு கனசதுர வடிவம் மற்றும் எண்முக வடிவங்களிலும் காணப்படுகிறது. நிலையற்ற உயர் வெப்பநிலை இணையளவு வடிவம் குளிர்தலின் விளைவாக இத்தகைய நிலைமாற்றம் நிகழ்வதாகக் கருதப்படுகிறது.
ஊடுறுவல் படிகயிருமைகள் வழக்கத்திற்கு மாறாக, நன்கு உருவான படிகங்கள் போலவும் ஜிப்சம் மற்றும் நீரற்ற கால்சியம் சல்பேட்டு ( அனிதரைட்) படிகங்களில் சிதறிக் கிடக்கும் உட்பொதிகள் போலவும் அசாதரணமாகக் காணப்படுகின்றன. கனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோல் மதிப்பு 7 முதல் 7.5 எனவும் மற்றும் ஒப்படர்த்தி மதிப்பு 2.9 என்ற மதிப்பையும் கொண்டுள்ளது. மேலும் இதனுடைய ஆல்பா, பீட்டா, காமா நிலை ஒளிவிலகல் குறிப்பெண் அளவுகள் nα = 1.658 - 1.662, nβ = 1.662 - 1.667, nγ = 1.668 - 1.673 எனவும் அறியப்பட்டுள்ளது. நீரில் கரையக்கூடியதாகவும் கனிமவியல் பிளவிற்கு மாறாக சங்குருவ இடைவெளியுடனும் இக்கனிமம் அறியப்படுகிறது.
பொதுவாக ஜிப்சம், அனிதரைட் , ஏலைட், சில்வைட், கார்னலைட் கைனைட் மற்றும் இல்கார்டைட் போன்ற கனிமங்களுடன் சேர்ந்த உலர்கனிமத் தொடர்ச்சியாக காணப்படுகிறது. 1789 ஆம் ஆண்டில் செருமனி நாட்டின் கால்பெர்க் மலைகள், உலூன்பெர்க் நகரம், சாக்சோனிக் நகரின் சிலபகுதிகளில் இதனுடைய மாதிரிகள் காணப்பட்டதாக அறியப்படுகிறது. கனிமத்தின் நிறையளவில் போரான் இருப்புவீதம் 19 முதல் 20 சதவீதமாக இருப்பதால் இது போரசைட் என்ற பெயரைப் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Boracite Mineral Data". Webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ "Boracite Gems". ClassicGems.net. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ "Boracite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ "Boracite" (PDF). Mineral Data Publishing. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- Palache, C., H. Berman, and C. Frondel (1951) Dana’s system of mineralogy, 7th edition, v. II, pp.378–381.