உள்ளடக்கத்துக்குச் செல்

பைசாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசாசம்
பிராமி: 𑀧𑁃𑀰𑀸𑀘𑀻
பிராந்தியம்பண்டைய வடமேற்கு இந்தியா
ஊழிகிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 10-ஆம் நூற்றாண்டு வரை[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3None (mis)
மொழிசார் பட்டியல்
qpp
மொழிக் குறிப்புpais1238[2]

பைசாச மொழி (Paishachi (ப.ச.ரோ.அ: Paiśācī) பண்டைய இந்தியாவின் வடமேற்கு பகுதியில் (தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம்) வாழ்ந்த பிசாசர்கள் எனும் இன மக்கள் பேசிய மொழி ஆகும். பைசாச மொழியானது பிராகிருத மொழியின் ஒரு வட்டார வழக்கு மொழியாகும்.[3][4] இது இந்திய-ஆரிய மொழிகளில் ஒன்றாகும். கிபி 7 அல்லது 8ஆம் நூற்றாண்டில் பைசாச மொழியில் குணாதித்தியர் எனும் கவிஞர் பிரகத்கதை எனும் நூலை இயற்றினார். கிபி 10-ஆம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவை இசுலாமியர் கைப்பற்றிய ஆக்கிரமித்த போது, பைசாச மொழி அழிவுற்றது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பைசாசம் at MultiTree on the Linguist List
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Paisaci Prakrit". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Dr. Narinder Sharma. Prakrita Prakasha Of Vararuchi Dr. P. L. Vaidya (in Sanskrit).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. "181 [95] - The home of the Paisaci - The home of the Paisaci - Page - Zeitschriften der Deutschen Morgenländischen Gesellschaft - MENAdoc – Digital Collections". menadoc.bibliothek.uni-halle.de.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசாசம்&oldid=3777694" இலிருந்து மீள்விக்கப்பட்டது