பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில்
பெயர்
பெயர்:பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில்
அமைவிடம்
ஊர்:பேரளம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுயம்புநாதசுவாமி
தாயார்:பவானி

பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்திலுள்ள சிவன் கோயில் ஆகும். [1]

அமைவிடம்[தொகு]

கும்பகோணம்-காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்குத் தெற்கே 3 கிமீ தொலைவில் பேரளத்தில் உள்ளது. [2]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் சுயம்புநாதசுவாமி, இறைவி பவானி.

அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தக் கிணறுகள் உள்ளன. [1] அக்னி தீர்த்தம் கோயிலுக்குக் கீழே உள்ளது. ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, மூலவர் சன்னதி, இறைவி சன்னதியுடன் இக்கோயில் உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது.

வழிபட்டோர்[தொகு]

பேரள முனிவர், யாக்ஞவல்கியர், சுக்ராச்சாரியார், மார்க்கண்டேயர், விசுவாமித்திரர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டோர் ஆவர். [2]

மேற்கோள்கள்[தொகு]