உள்ளடக்கத்துக்குச் செல்

பெலன் ஆறு

ஆள்கூறுகள்: 25°02′N 81°45′E / 25.033°N 81.750°E / 25.033; 81.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெலன் ஆறு (Belan River)(बेलन नदी) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும். இந்த ஆற்றின் கரையில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய தளங்களால் இந்த ஆறு பிரபலமானது.[1]

தோற்றம்

[தொகு]

பெலன் ஆறு சோன்பத்ரா மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலிருந்து உருவாகி, மிர்சாபூர் மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களின் தெற்குப் பகுதியில் பாய்கிறது.

சங்கமம்

[தொகு]

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இது தே. நெ. 27 மற்றும் தோங்கி கிராமத்திற்கு அருகில் தமாசா ஆற்றுடன் சங்கமிக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம்

[தொகு]
சோன்பத்ராவில் உள்ள பஞ்சமுகி மலையில் பெலன் பள்ளத்தாக்கு குகை ஓவியங்கள்

இது வரலாற்றுக்கு முந்தைய தளங்களுக்குப் பிரபலமானது. இது புதிகற்காலத்துடன் தொடர்புடையது. சோபானிமண்டோ என்பது மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கும், கோல்திவா அரிசி போன்ற தானியங்களுக்கும் பிரபலமானது. இந்த இரு இடங்களும் (இரண்டும் பிரயாக்ராஜ் மாவட்டத்தில்) பெலன் ஆற்றின் கரையில் விந்தியாவின் வடக்கு விளிம்புகளில் அமைந்துள்ள இரண்டு முக்கியமான அகழ்வாராய்ச்சி தளங்கள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vinod Chandra Srivastava (2008). History of Agriculture in India, Up to C. 1200 A.D. Concept Publishing Company. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-521-6.
  2. A History of Ancient and Medieval India: From Stone Age to 12th Century.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலன்_ஆறு&oldid=3793487" இலிருந்து மீள்விக்கப்பட்டது