உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்ரிக் குளோரைடு சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்ரிக் குளோரைடு சோதனையானது (Ferric chloride test) ஒரு மாதிரி அல்லது சேர்மத்தில் பீனாலிக் தொகுதியின் இருப்பினைக் கண்டறியப் (உதாரணமாக, தாவரங்களின் சாற்றில் காணப்படும் இயற்கை பீனால்களைக் கண்டறிதல்) பயன்படுகிறது.  ஈனால்கள், ஐதராக்சமிக் அமிலங்கள், ஆக்சைம்கள் மற்றும் சல்பினிக்  அமிலங்கள் ஆகியவை இந்தச் சோதனையில் நேர்மறையான முடிவைத் தருகின்றன.[1] நவீன நிறமாலைகாட்டிச்சோதனைகள் உதாரணமாக, அகச்சிவப்பு நிறமாலையியல் (IR Spectroscopy), அணுக்கருக் காந்த  ஒத்ததிர்வு நிறமாலையியல் (NMR Spectroscopy) போன்றவை பெயர் தெரியாத சேர்மங்களைக் கண்டறிவதில் மிகவும் மேம்பட்ட முறைகளாக இருப்பினும் கூட  புரோமின் சோதனையானது பெர்ரிக் குளோரைடு சோதனையின் முடிவை உறுதிசெய்வதில் பயனுள்ளதாக இருக்கிறது.  மொத்த பீனால்களின் அளவானது நிறமாலையியலின் பாலின்-சியோகால்டீயு அளவீட்டு முறையின் படி கணக்கிடப்படுகிறது.

நுட்பம்

[தொகு]

சோதித்தறியப்பட வேண்டிய மாதிரியானது நீர் மற்றும் எத்தனால் கலந்த கலவையில் கரைக்கப்படுகிறது.  இந்தக் கரைசலுடன் நீர்த்த பெர்ரிக் குளோரைடு கரைசலானது சேர்க்கப்படுகிறது.  சிவப்பு, நீலம், பச்சை அல்லது கருஞ்சிவப்பு நிறங்களின் தோற்றம் பீனால்களின் இருப்பைக் குறிக்கிறது.  சோதித்தறியப்பட வேண்டிய மாதிரியானது, நீரில் கரையாததாக இருந்தால், சிறிதளவு பிரிடீன் சேர்க்கப்பட்ட டைகுளோரோமீத்தேனில் கரைக்கப்படலாம்.

வேதியியல்

[தொகு]

பீனால்கள்  Fe(III)+ அயனியுடன் அடர்ந்த கருஊதா நிற அணைவுச்சேர்மங்களைத்  தருகிறது.   இந்த நிறமானது, பீனாலின் {Fe-[o-Ph]6}3- தன்மையைப் பொறுத்து நீலம், பச்சை மற்றும் சிவப்பாகக் கூட இருக்கலாம்.

மருத்துவப் பரிசோதனைகளில் பயன்பாடு

[தொகு]

இந்தச் சோதனையானது பிறப்பின் போதே ஏற்படும் வளர்சிதைமாற்றக் குறைபாடுகளுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிற சிறுநீரில் காணப்படும் பினைல் கீட்டோனுாரியா போன்ற வளர்சிதை வினைமாற்றப் பொருட்களைக் கண்டறியப் பயன்படுகிறது. பினைல்பைரூவேட் போன்ற சேர்மங்கள் பிளாசுமாவில் அதிகரிக்கும் போது சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்படுகின்றன. இந்தச் சோதனையானது, ஆசுபிரின் மருந்தானது அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டறிய உதவும் சிறுநீரில் வெளியாகும் பொருளான சாலிசிலேட்டுகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ferric Chloride — Pyridine Test Page". Chemistry.ccsu.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-09-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ரிக்_குளோரைடு_சோதனை&oldid=2749091" இலிருந்து மீள்விக்கப்பட்டது