உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சால் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சால் குளோரைடு
Skeletal formula of benzal chloride
Skeletal formula of benzal chloride
Ball-and-stick model of benzal chloride
Ball-and-stick model of benzal chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைகுளோரோமெத்தில்பென்சீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
(இருகுளோரோமெத்தில்)பென்சீன்
வேறு பெயர்கள்
  • பென்சைல் இருகுளோரைடு
  • பென்சைலிடின் இருகுளோரைடு
  • α,α-இருகுளோரோபென்சிலியா
இனங்காட்டிகள்
98-87-3 N
Beilstein Reference
1099407
ChemSpider 13882337 Y
EC number 249-854-8
InChI
  • InChI=1S/C7H6Cl2/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5,7H Y
    Key: CAHQGWAXKLQREW-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19165 Y
ம.பா.த சேர்மங்கள் பென்சைலிடின் சேர்மங்கள்
பப்கெம் 7411
வே.ந.வி.ப எண் CZ5075000
  • ClC(Cl)c1ccccc1
  • C1=CC=C(C=C1)C(Cl)Cl
UNII 222447TR16 N
UN number 1886
பண்புகள்
C7H6Cl2
வாய்ப்பாட்டு எடை 161.03 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.254 g/cm3, திரவம்
உருகுநிலை −17 முதல் −15 °C (1 முதல் 5 °F; 256 முதல் 258 K)
கொதிநிலை 205 °C (401 °F; 478 K) (82 °C @10 மிமீ பாதரசம்)
0.25 கி/லி 39 °செல்சியசில்
ஆவியமுக்கம் 0.6 கிலோபாசுகல்(45 °செல்சியசு)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு நச்சு (T), 2பி வகை, சுற்றுச்சூழலுக்கு அபாயகரமானது (N)
R-சொற்றொடர்கள் 22-23-37/38-40-41
S-சொற்றொடர்கள் 36/37-38-45
தீப்பற்றும் வெப்பநிலை 93 °C (199 °F; 366 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பென்சால் குளோரைடு (Benzal chloride) என்பது C6H5CHCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] நிறமற்ற இத்திரவம் கண்ணீர் புகை குண்டு போல கண்ணீர் வரவழைக்கும் தன்மை கொண்டதாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு கட்டுறுப்பாக இது பயன்படுகிறது.

தயாரிப்பு மற்றும் பயன்கள்

[தொகு]

பென்சைல் குளோரைடு (C6H5CH2Cl) மற்றும் அதைத் தொடர்ந்து பென்சைல் முக்குளோரைடு (C6H5CCl3) செயல்முறைகளுக்கு முன்நிகழ்வாக தொலுயீனை தனியுறுப்பு குளோரினேற்றம் செய்து பென்சால் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

C6H5CH3 + Cl2 → C6H5CH2Cl + HCl
C6H5CH2Cl + Cl2 → C6H5CHCl2 + HCl
C6H5CHCl2 + Cl2 → C6H5CCl3 + HCl

குறிப்பாக பென்சைலிக் ஆலைடுகள் வலிமையான ஆல்க்கைலேற்றும் முகவர்கள் என்பதால் பென்சால் குளோரைடு ஒரு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளாகக் கருதப்படுகிறது.

சோடியத்துடன் சேர்த்து பென்சால் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் சிடைபீன் உருவாகிறது.

பென்சால்டிகைடு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடியாகச் செயற்படுவதுதான் பென்சால் குளோரைடின் முக்கியமான தொழிற்சாலைப் பயனாகும். காரத்தின் முன்னிலையில் நிகழும் நீராற்பகுப்பால் இம்மாற்றம் நிகழ்கிறது.:[2]

C6H5CHCl2 + H2O → C6H5CHO + 2 HCl

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BENZAL CHLORIDE". International Programme on Chemical Safety. பார்க்கப்பட்ட நாள் 2007-10-30.
  2. Karl-August Lipper and Eckhard Löser “Benzyl Chloride and Other Side-Chain Chlorinated Aromatic Hydrocarbons" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2011, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.o04_o01
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சால்_குளோரைடு&oldid=2747624" இலிருந்து மீள்விக்கப்பட்டது