உள்ளடக்கத்துக்குச் செல்

புலிமுகம் தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிமுகம் தேவி கோயில்
கோயில் விழா

புலிமுகம் தேவி கோயில் இந்தியாவின் கேரள [1] மாவட்டத்தில் தாழவா பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இதன் மூலவர் பத்ரா பகவதி ஆவார். இக்கோயில் கருநாகப்பள்ளிக்கு வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக இக்கோயிலை அடையலாம். [2]

துணைத்தெய்வங்கள்

[தொகு]

கோயிலில் யட்சி, விநாயகர், நாகராஜா, நாக யட்சி, ராட்சசு உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. மேலும் சோதிட நிபுணர்களின் தேவ பிரஷ்னத்தின் படி சில சிலைகள்புதுப்பிக்கப்பட்டன அல்லது சேர்க்கப்பட்டுள்ளன.

காவி

[தொகு]

ஒரு காவு எனப்படுவதானது பாம்புக் கடவுள்கள் இருக்கும் ஒரு சிறிய காடாகவும், கரிம்பனா மரம், எழிலம் பலா மரம் ஆகியவற்றைக் கொண்டும் உள்ளதாகும். மேலும் கந்தர்வர்களும் யட்சிகளும் அங்கிருப்பதாக நம்பப்படுகிறது.

திருவிழாக்கள்

[தொகு]

இக்கோயிலில் பறையெடுப்பு, ஜீவித நல்லாத்து (ஊர்வலம்), மீன பரணி, பொங்கல் உள்ளிட்ட பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பறையெடுப்பின்போது உற்சவரை ஊர்வலமாகக் கொணர்வர். கோயில் மாதிரியில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு அங்கு காணப்படும். பல்லக்கு போன்ற இந்த அமைப்பில் உற்சவர் இருப்பார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pulimukham Devi Temple, Kollam, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
  2. "Pulimukham Devi Temple". பார்க்கப்பட்ட நாள் 16 March 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிமுகம்_தேவி_கோயில்&oldid=3830320" இலிருந்து மீள்விக்கப்பட்டது