உள்ளடக்கத்துக்குச் செல்

புருக்டோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புருக்டோசு

பிரக்டோசு (Fructose) என்பது ஓர் எளிய ஒற்றைச்சர்க்கரை ஆகும். இது பழச் சர்க்கரை எனவும் அறியப்படுகின்றது. பல தாவரங்களில் பிரக்டோசு பொதுவாகக் காணப்படுகின்றது[1]. இங்கு சுக்ரோசு என்ற இரட்டைச் சர்க்கரையாக மாறுவதற்காக பெரும்பாலும் குளுக்கோசுடன் பிணைந்து காணப்படுகிறது. பிரக்டோசின் கட்டமைப்பில் கீட்டோன் குழு இடம்பெற்றுள்ளது.இதைத் தவிர இரண்டு ஓரினைய ஆல்ககால் தொகுதிகளும் மூன்று ஈரினைய ஆல்ககால் தொகுதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குளுக்கோசு மற்றும் கேலக்டோசு ஆகியவற்றுடன் சேர்ந்து உணவுத்திட்ட மூன்று ஒற்றைச் சர்க்கரைகளில் இதுவும் ஒன்றாகிறது. இவை மூன்றும் செரிமானத்தில் இரத்தத்தில் நேரடியாக உறிஞ்சப்படுகின்றன. இதனை முதன் முதலில் கண்டறிறிந்தவர் பிரான்சிய வேதியியலாளர் அகசுட்டின்-பியரே டப்ருன்போவ்ட் என்பவராவார். 1947 ஆம் ஆண்டு இவர் பிரக்டோசைக் கண்டுபிடித்தார் [2][3]. 1857 ஆம் ஆண்டு ஆங்கில நாட்டு வேதியியலாளர் வில்லியம் ஆலென் மில்லர் இதற்கு பிரக்டோசு என்ற பெயரைச் சூட்டினார் [4]. தூய்மையான உலர்நிலையில் உள்ள பிரக்டோசு இனிப்பானது. வெண்மையானது. நெடியற்ற படிகத்திண்மமாகக் காணப்படுகிறது. அதிகமாகத் தண்ணீரில் கரையக்கூடிய சர்க்கரை பிரக்டோசு ஆகும் [5]. தேன், பழங்கள், மலர்கள், வேர்காய்கள் போன்றவற்றில் பிரக்டோசு இயற்கையில் கிடைக்கிறது.

வணிக ரீதியாக, பிரக்டோசு கரும்பு, பீட்ரூட் மற்றும் மக்காச்சோளத்திலிருந்து பெறப்படுகிறது. படிகநிலை பிரக்டோசு என்பது ஒற்றைச்சர்க்கரையாகும். உலர்ந்த நிலையில் பொடியாக்கப்பட்டு உயர் தூய்மை கொண்டதாக உள்ளது. உயர் பிரக்டோசு சோள மருந்து என்பது குளுக்கோசு மற்றும் பிரக்டோசு ஆகியவற்றின் கலவையாகும். ஒரு மூலக்கூறு குளுக்கோசும் ஒரு மூலக்கூறு பிரக்டோசும் சேர்ந்த கலவையே சுக்ரோசு எனப்படும் சர்க்கரையாகும். பிரக்டோசின் அனைத்து வடிவங்களும் சுவைக்காகவும் சுவை அதிகரிப்புக்காகவும் உணவுடனும் பானங்களுடனும் சேர்க்கப்படுகின்றன. 240000 டன்கள் படிகபிரக்டோசு ஆண்டோதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது[6].

எந்த சர்க்கரையாக இருந்தாலும் பிரக்டோசு அதிக அளவில் நுகரப்பட்டால் இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன், உயர்த்தப்பட்ட எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவை வளர்சிதை மாற்ற நோய்க்குறி,வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும் [7]. சுக்ரோசு, குளுக்கோசு இரண்டும் சேர்க்கப்பட்ட உணவுகளைக் காட்டிலும் பிரக்டோசு விரும்பத்தக்கது என்று ஐரோப்பிய உணவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. ஏனெனில் இதனுடைய இரத்தச் சர்க்கரை அளவு குறைவானதாக உள்ளது. பிரக்டோசு அதிக உட்கொள்ளலால் வளர்சிதை மாற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். மேலும், 2015 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து தொடர்பான பிரிட்டனின் அறிவியல் ஆலோசனைக் குழுவானது, அதிக பிரக்டோசு வளர்சிதைமாற்றக் கோளாறுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுவதை எதிர்த்து வாதிட்டது. அதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வாதிட்டது.

தயாரிப்பு

[தொகு]

அடர் சர்க்கரைக் கரைசலை நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து நீராற்பகுத்து பிரக்டோசு தயாரிக்கப்படுகிறது. நீராற்பகுப்பிற்குப் பின்னர் கரைசலுடன் சுண்ணாம்பு சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. கால்சியம் பிரக்டோசெட்டு வீழ்படிவாகிரது. விழ்படிவை பிரித்தெடுத்து நீர் சேர்த்து கரைசலின் வழியாக கார்பன் டை ஆக்சைடு செலுத்தப்படுகிறது. கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது. கரைசல் அடர்ப்பிக்கப்பட்டு பிரக்டோசு படிகமாக்கப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

இதுவொரு வெண்படிகத் திண்மமாகும். கரும்புச் சர்க்கரையைக் காட்டிலும் இனிப்பு மிக்கதாகும். ஒளிசுழற்றும் தன்மை கொண்டதாகும். இடஞ்சுழி சேர்மமாதலால் இதை லெவுலோசு என்றும் அழைப்பர்.

வேதிப்பண்புகள்

[தொகு]

பிரக்டோசு ஆறு கார்பன் அணுக்கள் கொண்ட ஒரு பல்லைதராக்சி கீட்டோனாகும். படிகநிலை பிரக்டோசு வளைய ஆறு உறுப்பினர் கட்டமைப்பை ஏற்கிறது. எமிகீட்டால் நிலைப்புத் தன்மையையும் உட்புற ஐதரசன் பிணைப்பையும் வழங்குகிறது. இவ்வடிவம் முன்னதாக டி-பிரக்டோபைரினோசு என்று அழைக்கப்பட்டது. கரைசலில் பிரக்டோசு 70% பிரக்டோபைரனோசு ஆகவும் 22% பிரக்டோபியூரனோசு ஆகவும் காணப்படுகிறது. இவற்றைத் தவிர வளையமில்லா வடிவமும் சேர்ந்து மூன்று வடிவங்களில் பிரக்டோசு சிறிய அளவில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fructose is a carbohydrate that is roughly 1.2 times the sweetness of table sugar and is found in fruits and other foods". பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. Dubrunfaut (1847) "Sur une propriété analytique des fermentations alcoolique et lactique, et sur leur application à l’étude des sucres" பரணிடப்பட்டது 2014-06-27 at the வந்தவழி இயந்திரம் (On an analytic property of alcoholic and lactic fermentations, and on their application to the study of sugars), Annales de Chimie et de Physique, 21 : 169–178. On page 174, Dubrunfaut relates the discovery and properties of fructose.
  3. Fruton, J.S. Molecules of Life 1972, Wiley-Interscience
  4. William Allen Miller (1857). Elements of Chemistry: Theoretical and Practical, Part III. Organic Chemistry; pages 52 and 57. John W. Parker and son, London, England. Archived from the original on 2014-06-27. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)
  5. Hyvonen, L.; Koivistoinen, P (1982). "Fructose in Food Systems". In Birch, G.G.; Parker, K.J (eds.). Nutritive Sweeteners. London & New Jersey: Applied Science Publishers. pp. 133–144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85334-997-5. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  6. Wolfgang Wach "Fructose" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2004, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a12_047.pub2
  7. Rippe, James M.; Angelopoulos, Theodore J. (2015-07-01). "Fructose-containing sugars and cardiovascular disease". Advances in Nutrition (Bethesda, Md.) 6 (4): 430–439. doi:10.3945/an.114.008177. பன்னாட்டுத் தர தொடர் எண்:2156-5376. பப்மெட்:26178027. 

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருக்டோசு&oldid=3581014" இலிருந்து மீள்விக்கப்பட்டது