புத்தர் கோயில், பெருஞ்சேரி
புத்தர் கோயில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி என்னும் ஊரில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புத்தர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1]
அமைவிடம்
[தொகு]இக்கோயில் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சுந்தரப்பன்சாவடியில் இருந்து கிளியனூர் செல்லும் சாலையில் 0.5 கிமீ தொலைவில் உள்ள பெருஞ்சேரியில் உள்ளது. [2]
அமர்ந்த நிலை
[தொகு]இங்கு 5 அடி 3 அங்குலம் உயரமுள்ள அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலை ஒன்று உள்ளது. இதன் பீடத்தில் தமிழ் எழுத்துக் கல்வெட்டு அழிந்த நிலையில் காணப்படுகிறது. இப்போது இது இருக்கும் இடத்திலிருந்து ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள ஒரு தோப்பில் இச்சிலை முன்பு இருந்தது.[3] வழக்கமான சுருள்முடி, தலைக்கு மேல் தீச்சுடர், நீண்ட காதுகள், மார்பின் குறுக்கில் ஆடை போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாகும். [4]
ரிஷிக்கோயில்
[தொகு]இக்கோயில் ரிஷிக்கோயில் என்றழைக்கப்படுகிறது. [2] [5]
வழிபாடு
[தொகு]இக்கோயிலில் அவ்வப்போது வழிபாடு நடத்தப்படுகிறது. [6] உள்ளூர் மக்கள் அவ்வப்போது விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பெருஞ்சேரி புத்தர் கோயில், தமிழிணையம், தமிழர் தகவலாற்றுப்படை
- ↑ இங்கு மேலே தாவவும்: 2.0 2.1 புத்தர் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறார், தினமணி, 20 செப்டம்பர் 2012
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957, ப.46
- ↑ C.Minakshi, "Buddhism in South India", South Indian Studies-II (Ed.R.Nagaswamt, Society for Archaeological, Historical Research, Madras, 1979, p.115
- ↑ Census of India 1961, Vol IX, Tamilnadu Par XI-D, Temples of Tamil Nadu, Vol VII (i) Thanjavur, Director of Census Operations, Tamil Nadu and Pondicherry, 1971, p.434
- ↑ டெல்டா மாவட்டங்களில் பராமரிப்பின்றி புத்தர் சிலைகள், தினமலர், 27 ஏப்ரல் 2014