உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தகோல்

ஆள்கூறுகள்: 19°49′13″N 84°49′25″E / 19.820230°N 84.823503°E / 19.820230; 84.823503
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தகோல்
வரலாற்று சுற்றுலா தலம்
புத்தகோல்
புத்தகோல் is located in ஒடிசா
புத்தகோல்
புத்தகோல்
ஒரிசாவின் புகுடாவில் உள்ளது
புத்தகோல் is located in இந்தியா
புத்தகோல்
புத்தகோல்
புத்தகோல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°49′13″N 84°49′25″E / 19.820230°N 84.823503°E / 19.820230; 84.823503
Countryஇந்தியா
Stateஒரிசா
Districtகஞ்சம்
நேர வலயம்ஒசநே+05:30 (IST)

புத்தகோல் (ஆங்கிலம்: Budhakol) என்பது ஒடிசாவின் மரபார்ந்த சுற்றுலா தலமாகும், இது இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் புகுடா (ஆங்கிலம்: Buguda) தொகுதியில் அமைந்துள்ளது. [1] இது மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 92 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மரபார்ந்த இத்தலம் பசுமையான மரங்கள், குகைகள், கோவில்கள் மற்றும் வற்றாத நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது, இத்தலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. ஐந்து கோயில்கள் கொண்ட தொகுப்பு இந்த இடத்தின் மற்றொரு சிறப்பாகும். பஞ்ச மகாதேவர் கோவில் என்று புகழ் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ மகரேசுவர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ கங்காதரேஸ்வர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஜகதீஸ்வர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ புத்தேஸ்வர் சுவாமி ஆகிய ஐந்து கோவில்கள் இங்கு உள்ளன.

வரலாறு

[தொகு]

புத்தகோல் என்ற இடத்தின் பெயர் பதேஸ்வரா என்பதிலிருந்து உருவானது. அதாவது தியான நிலையில் இருக்கும் புத்தர் என்பது இதன் பொருள். புத்தர் இந்த இடத்திற்கு வந்ததாக திடமாக நம்பப்படுகிறது. ஹூன்ட்சாங் என்ற இடத்திற்குச் சென்று, புத்தர் பௌத்தர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலைக் கண்டாராம். இது பௌத்தத்தைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடம் என்றும் கருதினாராம். பஞ்சுமகாதேவர் கோவில்கள் ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியார் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவே இந்த இடம் பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டின் கலவையாகத் திகழ்கிறது. [2]

சுற்றுலா

[தொகு]

புத்தகோல் இதன் பௌத்த கலாச்சாரத்திற்காக பரவலாக அறியப்படும் தலமாகும். இந்த இடத்தில் பல பௌத்த எச்சங்கள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் பௌத்தர்கள் தங்கியிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்த இடத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் குகைகள், காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவற்றின் கலவையாகும், ஐந்து கோயில்களின் தொகுப்பையும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டும். [3] இங்குள்ள 42 அடி உயரமுள்ள சிவன் மற்றும் பார்வதியின் சிலைகளை இந்திய இளவரசி இப்சிதா பதி (ஆங்கிலம்: Ipsita Pati) நன்கொடையாக அளித்துள்ளார்:

குகை

[தொகு]

புத்தகோல் என்பது யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வருகை தரும் ஒரு அறிவியல் தலமாகும். குகைகள் இத்தலத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாகும். புகுடாவிலிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் ஏறும் போது, தெற்கே ஒரு மிகப் பெரிய கல்லைக் காணலாம். இது பத்தரகாய் என்று அழைக்கப்படுகிறது. [4] ஒரே மலையில் சுற்றுலாப் பயணிகள் வெவ்வேறு குகைகளைக் காணலாம். பௌத்த பிக்குகள் தங்கி தியானம் செய்யும் சித்த கும்பா அவற்றில் ஒன்று. தயானா என்ற மற்றொரு குகையும் உள்ளது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் சுமார் 495 படிகள் உள்ளன.[தெளிவுபடுத்துக]

நீர்வீழ்ச்சிகள்

[தொகு]

மலைகளின் மேல் பகுதியில் ஒரு வற்றாத நீரோடையிலிருந்து, பஞ்சுரியா என்ற நீர்வீழ்ச்சி உருவாகிறது. அருவியில் இருந்து வரும் தண்ணீர், 25 அடி உயரத்தில் இருந்து ஆலமரத்தின் மீது பாய்ந்து, தூவானமாக சிதறுகிறது. பஞ்சுரியா நீர்வீழ்ச்சியின் நீர் மருத்துவ குணங்களைக் கொண்டதாக நம்பப்படுகிறது. [5] 

திருவிழாக்கள்

[தொகு]
  • மஹாசப்தமி
  • சம்பா தசமி
  • ரத யாத்திரை
  • தண்டா யாத்ரா (ஏப்ரல்)
  • துர்கா பூஜை
  • காளிபூஜை
  • போல்பம்
  • கார்த்திகைபௌர்ணமி
  • மஹாசிவராத்திரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Budhakhol. "Indian Tourist place". ganjam.nic.in. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  2. Budhakhol, History of. "History of Budhakhol". www.indiamapped.com.
  3. "Tourist Places In Ganjam". Archived from the original on 2014-06-02. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  4. "Caves at Budhakhol". www.orissagateway.com/. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
  5. "Best Spot of Ganjam Buddhakhol". Archived from the original on 2012-02-26. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தகோல்&oldid=3429030" இலிருந்து மீள்விக்கப்பட்டது