உள்ளடக்கத்துக்குச் செல்

பிறரன்பின் பணியாளர்கள் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னை தெரேசா - பிறரன்பின் பணியாளர்கள் சபையின் நிருவனர்
நீல வண்ண கரையுடைய வெண் புடவையில் பிறரன்பின் பணியாளர்கள் சபை சகோதரிகள்.

பிறரன்பின் பணியாளர்கள் சபை என்பது அன்னை தெரேசாவால் நிருவப்பட்ட ஒரு கத்தோலிக்க துறவற சபையாகும். இதில் 4,500 அருட்சகோதரிகள் உள்ளனர். இச்சபையின் உறுப்பினர்கள் கற்கு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் வாக்குறுதிகளை அளிப்பர். இதனோடு நான்காவதாக "ஏழையிலும் ஏழையாஉ இருப்போருக்கு முழுமனதோடும் சுதந்திரத்த்தோடும் பணிப்புரியவும்" வாக்களிப்பர்.[1] தியான வாழ்வு மற்றும் பணி வாழ்வு ஆகிய இரு பிரிவுகளும் இச்சபையில் உண்டு.

1963-இல் தியான வாழ்வு சகோதிரிகள் பிரிவும் பணி வாழ்வு சகோதரர் பிரிவும் தோற்றுவிக்கப்பட்டது. சகோதரர் பிரிவு, சகோதரர் ஆண்டிரூ M.C. மற்றும் ஆஸ்திரேலிய இயேசு சபை அருட்தந்தை இயான் டிராவர்ஸ்-பால் S.J-வால் இணை-நிறுவப்பட்டது.[2] 1979-இல் சகோதரர்களுக்கான தியான வாழ்வு பிரிவு சேர்க்கப்பட்டது; மேலும் 1984-இல் குருக்களுக்கான கிளையையும்,[3] அன்னை தெரேசா மற்றும் அ.த. ஜோசப் லாங்க்ஃபோர்டு இணைந்து தோற்றுவித்தனர். அருட்சகோதரிகளைப் போலவே அருட்தந்தைகளும் தொலைக்காட்சி, வானொலி போன்ற வசதிகளற்ற எளிய வாழ்வுமுறையைக் கடைபிடித்தனர். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலையும் தவிர்த்து, உணவினையும் இரந்தே பெறுவர். தத்தம் குடும்பங்களை ஐந்தாண்டுகளுக்கொருமுறை சந்திப்பர்; ஆண்டு தோறும் விடுமுறைகள் மேற்கொள்வதில்லை.[4] கத்தொலிக்கரும் கத்தொலிக்கரல்லாதோரும் அன்னை தெரேசாவின் உடன் உழைப்பாளர்கள், பிணி மற்றும் வாடுவோரின் உடன் உழைப்பாளர்கள் மற்றும் பொதுநிலையினருக்கான பிறரன்பின் பணியாளர்கள் ஆகிய அமைப்புகளில் அடங்குவர்.

ஏதிலிகள், முன்னாள்-விலைமாதர், உளப் பிறழ்ச்சி உடையோர், நோயுற்ற சிறார்கள், கைவிடப்பட்ட சிறார்கள், தொழு நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், முதியோர், நோயிலிருந்து மீள்பவர் முதலியோருக்கு இவர்கள் பணியாற்றுகின்றனர். தன்னார்வத் தொண்டர்கள் துணையோடு தெருப்பிள்ளைகளுக்கான பள்ளிகளை நடத்துதல்; அன்னதான அமைப்புகளை நடத்துதல் போன்ற பல சேவைகளை சமுதாயத்தின் தேவைகளைப் பொருத்து மேற்கொள்வர். பெண்களுக்கான இல்லம், அனாதை இல்லம், இறப்போர் இல்லம், எய்ட்ஸ் நல்வாழ்வு மையம்,  தெருக் குழந்தைகள் பள்ளி, தொழுநோயாளிகள் காப்பகம் என கொல்கத்தாவில மட்டும் 19 இல்லங்களை இவ்வமைப்பு நடத்திவருகிறது. இச்சேவைகள் அனைத்தும் சாதி மத பேதமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.

பிறரன்பு பணியாளராதல்

[தொகு]

ஒரு முழு பிறரன்பு பணியாளராக ஒன்பதாண்டு காலம் பிடிக்கும். துவக்கத்தில் பணியாளர் வாழ்வில் ஆர்வமுள்ள எவரும் குறுகிய கால "பார்த்து செல்"லும் அனுபவத்தை மேற்கொள்ளலாம். பின்னும் அவ்விளம்பெண்கள் அமைப்பில் சேர விரும்பி, மதச்சபையால் சாத்தியமுள்ள வேட்பாளராகக் கருதப்பட்டால், விழைவு கட்டத்துள் நுழைவர். இந்நிலையில் அவர்களது கிறித்துவ வாழ்க்கை முறை ஆழப்படுத்தப்படுவதோடு, ஆங்கில மொழியல்லாத நாடுகளைச் சேர்ந்தோருக்கு ஆங்கிலப் பயிற்சியும் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து மதச்சபை வேட்பாளராதல் என்ற நிலையில் புனித விவிலிய வர்ணனைகள், சமூகத்தின் நிர்ணய ஆவணங்கள், தேவாலய வரலாறு, மற்றும் இறையியல் முதலியவை குறித்த கல்வி அறிமுகப்படுத்தப்படும். தகுதியுடையோர் உண்மையான மத வாழ்வான துறவுபுகு நிலையை அடைவர். புதுத் துறவிகள் இடைக்கச்சையுடனான பருத்தி அங்கி, நீல பட்டைகளற்ற வெள்ளைப் புடவைகள் உடுத்துவர். ஒழுங்குமுறை என்றழைக்கப்படும் முதலாண்டில் இறை உறவையும் செபவாழ்வையும் மேம்படுத்தப்படுவதோடு அமைப்பு குறித்த அறிவும் போதிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் அருட்பணி வாழ்விற்குத் தேவையான செயல்முறைப் பயிற்சிக்கே பெரிதும் கவனமளிக்கப்படும். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ஆண்டுதோறும் (ஐந்து ஆண்டுகளுக்கு) புதுப்பிக்கப்படும் ஓராண்டிற்கான தற்காலிக சத்தியப் பிரமாணத்தை மேற்கொள்வர். அப்போது மதச்சபையின் நீலப் பட்டை சரிகை பொருந்திய வெண்புடவையும், கிறித்துமீதான தம் இல்லற அன்பின் அடையாளமாக ஒரு உலோகச் சிலுவையும் வழங்கப்படும். ஆறாம் ஆண்டில் அவர்கள், துறவு முழுமை பெறல் பொருட்டு, ஓராண்டு ஆழ்ந்த ஆன்மிக மேம்பட்டிற்காக உரோமிற்கோ, கொல்கத்தாவிற்கோ அல்லது வாஷிங்க்டன் டி.சி-க்கோ பயணப்படுவர்; இவ்வாண்டு இறுதியில் தம் இறுதிப் பணியை மேற்கொள்வர்.

பொருளுடைமகள்

[தொகு]

ஒரு அருட்சகோதரியின் உடைமைகளுள் அடங்கியவை: மூன்று புடவைகள் (உடுத்த, துவைக்க, சீரமைக்க ஒவ்வொன்று); இரண்டல்லது மூன்று பருத்தி அங்கிகள்; ஒரு அரைக்கச்சை; ஒரு ஜோடி செருப்புகள்; ஒரு திருச்சிலுவை; மற்றும் ஒரு செபமாலை. மேலும் ஒரு தட்டு, சில வெட்டுக்கருவிகள், ஒரு துடைப்பக்குட்டை, ஒரு துணிப்பை மற்றும் ஒரு செப புத்தகத்தையும் தம் வசம் வைத்திருப்பர். குளிர் பகுதிகளில் சகோதரிகள் ஒரு கம்பளிச்சட்டை மற்றும் அப்பகுதி தட்பவெட்ப நிலையைப் பொருத்து மேலங்கிகளும் பாதக்குரடுகளும் உடன் வைத்திருப்பர்.

குறிப்புகள்

[தொகு]
  1. Muggeridge poo faceer 3, "Mother Teresa Speaks,", pp. 105, 113
  2. "Australian Founder of Missionary Brothers of Charity Dies".
  3. "Mother Teresa – Biography".
  4. "Missionaries of Charity Fathers website: Who we are". Archived from the original on 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-31.

வெளி இணைப்புகள்

[தொகு]