உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய உலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேநீர் பாத்திரம், பிரித்தானிய உலோகம்

பிரித்தானிய உலோகம் (Britannia metal or britannium or Britannia ware[1]) என்பது ஒரு சிறப்பு வகை பியூட்டர் கலப்புலோகம் ஆகும். இது இதன் வெள்ளி போன்ற பளபளப்பான தோற்றம் மற்றும் மென்மையான புறப்பரப்பிற்காகவும் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த கலப்புலோகத்தின் எடை இயைபு வெள்ளீயம் 92% , அந்திமனி 6% மற்றும் தாமிரம் 2% என்றவாறு அமைகிறது[2]

பிரித்தானிய உலோகம் என்பது வார்ப்பு என்பதகை் காட்டிலும் அழுத்தச் சுற்று முறையில் உலோகத்தை வனையும் செயல்முறையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்த கலப்புலோகத்தின் உருகுநிலை 255 செல்சியசு ஆகும்[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Britannia Ware English".
  2. "Britannia metal". Archived from the original on 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2018-11-01.
  3. Composition and Physical Properties of Alloys பரணிடப்பட்டது ஏப்பிரல் 26, 2012 at the வந்தவழி இயந்திரம், Oliver Seely, August 18, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானிய_உலோகம்&oldid=3563602" இலிருந்து மீள்விக்கப்பட்டது