பிராங்கிகா இசுடான்கோவிக்
பிராங்கிகா இசுடான்கோவிக் | |
---|---|
Бранкица Станковић | |
2010 பிராங்கிகா | |
தாய்மொழியில் பெயர் | Бранкица Станковић |
பிறப்பு | அக்டோபர் 1975 பெல்கிரேடு, யுகோசுலேவியா |
தேசியம் | செர்பியர் |
பணி | ஊடகவியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1996—தற்போது வரை |
பணியகம் | பி92 |
அறியப்படுவது | இன்சைடர் |
பிராங்கிகா இசுடான்கோவிக் ( Brankica Stanković ; அக்டோபர் 1975 இல் பிறந்தார்) செர்பிய புலனாய்வு பத்திரிகையாளர் ஆவார். செர்பியாவில் குற்றம் மற்றும் அரசியல் ஊழல் பற்றிய தலைப்புகளில் அறிக்கை செய்கிறார். 2004 மற்றும் 2015 க்கு இடையில் பி92 தொலைக்காட்சி மற்றும் 2016 முதல் தனது சொந்த செய்தி தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "இன்சைடர்" என்ற புலனாய்வு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியின் முக்கிய எழுத்தாளர் ஆவார்.
இவரது அறிக்கைகள் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தன. மேலும் இவர் வழக்கமாக மரண அச்சுறுத்தல்களைப் பெறுகிறார். இந்த காரணத்திற்காக, இவர் டிசம்பர் 2009 முதல் 24 மணிநேர காவல்துறைபாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார் [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பிராங்கிகா, அக்டோபர் 1975 இல் செர்பியாவின் பெல்கிரேடில் (அப்போது யூகோசுலாவியா ) பிறந்தார் [2] உயர்நிலைப் பள்ளி பட்டப்படிப்புக்குப் பிறகு, ஒரு தனியார் நடிப்புப் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறினார்.[2] 1996 இல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான ஆர்டிவி ஸ்டுடியோ B இல் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ஓராண்டு கழித்தார்.[2] 1997 இல், இவர் ரேடியோ பி92 க்கு மாறினார். தற்போது அங்கு பணிபுரிந்து வருகிறார்.[2] 1990 களில், பி92 ஒரு முக்கிய ஜனநாயக சார்பு செய்தி ஒளிபரப்பு நிறுவனமாக இருந்தது. அப்போதைய அதிபர் இசுலோபோடன் மிலோசெவிச்சின் ஊழல் ஆட்சிக்கு எதிராக இருந்தது.[3] இவரது ஆரம்பகால வாழ்க்கையில், பி92 வானொலி செய்தி நிகழ்ச்சிகளின் ஆசிரியராக இருந்தார். மேலும் ஜூடோபிஜா மற்றும் அபத்ரிஜா போன்ற வாராந்திர நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தார்.[2] செர்பிய வானொலி, ஜெர்மன் வானொலி ஆகியவற்றின் வெளிநாட்டு நிருபராகவும் பணியாற்றினார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "EKSKLUZIVNO Brankica Stanković govorila je dok je Srbija šutjela... I zato je već 1416 dana pod policijskom zaštitom ("Exclusive: Brankica Srankovic Spoke While Serbia Was Quiet... and That Is Why She's Been Under Police Protection for 1416 Days")". jutarnji.hr (in Croatian). Jutarnji list. 20 October 2013. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Brankica Stanković பரணிடப்பட்டது 2018-05-11 at the வந்தவழி இயந்திரம் profile on B92 official site
- ↑ Mitchell, Laurence (2013). Serbia 4, Bradt Travel Guide Series. Chalfont St Peter, England: Bradt Travel Guides. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781841624631. பார்க்கப்பட்ட நாள் 8 October 2013.