உள்ளடக்கத்துக்குச் செல்

பிணைப்பு வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிணைப்பு வரிசை, லினஸ் பாலிங் அறிமுகப்படுத்தியபடி, பிணைப்புகளின் எண்ணிக்கைக்கும் எதிர் பிணைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு என வரையறுக்கப்படுகிறது.

பிணைப்பு எண் என்பது ஒரு இணை அணுக்களுக்கு இடையிலான எதிர்மின்னி இரட்டைகளின் (பிணைப்புகள்) எண்ணிக்கை ஆகும். எடுத்துக்காட்டாக, ஈரணு நைட்ரசனின் N≡N பிணைப்பு வரிசை 3 ஆகும். அசிட்டிலீன் H−C≡C−H மூலக்கூற்றல் இரண்டு கார்பன் அணுக்கள் இடையிலான பிணைப்பு வரிசை அல்லது பிணைப்பு எண் 3 ஆகவும், மற்றும் C−H பிணைப்பு வரிசை1 ஆகவும் உள்ளது. பிணைப்பு எண் அல்லது பிணைப்பு வரிசை ஒரு பிணைப்பின் நிலைத்தன்மையைக் குறிக்கிறது. ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கையுள்ள இனங்கள் ஒரே பிணைப்பு வரிசையைக் கொண்டுள்ளன.

உடனிசைவு அல்லது இயக்கவியலல்லாத பிணைப்பைக் கொண்ட மூலக்கூறுகளில், பிணைப்பு வரிசை ஒரு முழு எண்ணாக இருக்காது. பென்சீனில், பரவிய நிலையிலுள்ள அல்லது தனி இடத்தைக் கொண்டிராத மூலக்கூறு ஆர்பிட்டால்கள் ஆறு கார்பன்களுக்கு மேல் 6 பை எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கின்றன, அடிப்படையில் ஒவ்வொரு பை கார்பன் அணுக்களுக்கும் சிக்மா பிணைப்புடன் அரை பை பிணைப்பை அளிக்கிறது, இது கணக்கிடப்பட்ட பிணைப்பு வரிசை 1.5 ஐக் கொடுக்கும். மேலும், பிணைப்பு வரிசை 1.1 போன்றவை சிக்கலான சூழ்நிலைகளின் கீழ் எழக்கூடும், மேலும், இவை பிணைப்பு வரிசை 1 ஐக் கொண்டுள்ளவற்றின் பிணைப்பு வலிமையைக் குறிக்கலாம்.

மூலக்கூறு வட்டணைக் கோட்பாட்டில் பிணைப்பு வரிசை

[தொகு]

மூலக்கூறு சுற்றுப்பாதைக் கோட்பாட்டில், பிணைப்பு வரிசை என்பது கீழே உள்ள சமன்பாட்டின் படி பிணைப்பு எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் எதிர் பிணைப்பு எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான வித்தியாசத்தின் பாதியாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஆனால் எப்போதும் அல்லாமல், அவற்றின் சமநிலை நீளத்திற்கு அருகிலுள்ள பிணைப்புகளுக்கு ஒத்த முடிவுகளை அளிக்கிறது, ஆனால் அது நீட்டப்பட்ட பிணைப்புகளுக்கு சரியான முடிவுகளை அளிப்பதில்லை. [1] பிணைப்பு வரிசை என்பது பிணைப்பு வலிமையின் ஒரு குறியீடாகும்.மேலும், இது இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிணைப்பு வரிசை = (பிணைப்பில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை –எதிர் பிணைப்பில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை)/2

பொதுவாக, பிணைப்பு வரிசை அல்லது பிணைப்புத் தரத்தின் மதிப்பு அதிகமாக, அதிகமாக பிணைப்பின் வலிமையும் அதிகமாகிறது. பிணைப்பு வரிசையின் மதிப்பு 1.5 -இற்கும் அதிகமாக இருந்தால், அது நிலையானதாக இருக்கும். H+
2
-இன் (பிணைப்பு நீளம் 106 பிகோ மீட்டர், பிணைப்பு ஆற்றல் 269 கிலோ ஜுல்/மோல்) and He+
2
(பிணைப்பு நீளம் 108 பிகோ மீட்டர், பிணைப்பு ஆற்றல் 251 கிலோ ஜுல்/மோல்) ஆகியவற்றின் தரவுகளிலிருந்து இது தெரிய வருகிறது.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. T. A. Manz (2017). "Introducing DDEC6 atomic population analysis: part 3. Comprehensive method to compute bond orders". RSC Adv. 7 (72): 45552–45581. doi:10.1039/c7ra07400j. 
  2. Bruce Averill and Patricia Eldredge, Chemistry: Principles, Patterns, and Applications (Pearson/Prentice Hall, 2007), 409.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணைப்பு_வரிசை&oldid=3042361" இலிருந்து மீள்விக்கப்பட்டது