உள்ளடக்கத்துக்குச் செல்

பாவ்னா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவ்னா
இயக்கம்பிரவீன் பட்
தயாரிப்புதேவி தத்
கதைமுஸ்தாக் ஜலிலி
இசைபப்பி லஹரி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரவீன் பட்
படத்தொகுப்புபி. பிரசாத்
வெளியீடு1984 (1984)
நாடுஇந்தியா
மொழிஇந்தி

பாவ்னா (Bhavna) என்பது 1984 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படமாகும். இது ஒளிப்பதிவாளராக அறிமுகமான பிரவின் பட் இயக்கியதாகும். இப்படத்தில் சபனா ஆஸ்மி, மார்க் ஜூபர், கன்வால்ஜித் சிங், சயீத் ஜாஃப்ரி, ரோகினி ஹட்டங்காடி, சதீஷ் ஷா மற்றும் ஊர்மிளா மடோன்கர் (குழந்தை நடிகையாக) நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பப்பி லஹரி இசை அமைத்துள்ளார்.

கதைக்களம்

[தொகு]

"பாவ்னா" திரைப்படம் வறுமை நிலையில் வசிக்கும் ஒரு பெண்ணின் கதை ஆகும். ஒரு நகரத்தில் தனியாக வசிக்கும் பாவ்னா சக்சேனா என்ற அனாதையான ஒரு இளம் பெண், ஒரு தோட்டத்தில் அவளது உருவப்படத்தை வரைந்த அஜய் கபூர் என்வரைச் சந்திக்கிறார். அவர்கள் நண்பர்களாகி பின்னர் அந்த நட்பு காதலாக மாறுகிறது. இறுதியில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், இருப்பினும், கபூரின் அப்பா இந்த திருமணத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அஜய் போதிய பணம் சம்பாதிக்காத கலைஞன். பாவனா தனது ஓவியங்களை வீடு வீடாகச் சென்று விற்க முயற்சிக்கிறார், ஆனால் அவர்களின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இந்த மோசமான நிதி நிலைமைக்கு மத்தியில், பாவனா தான் அஜய்யின் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தாள். குழந்தையை வளர்க்கும் செலவை தன்னால் தாங்க முடியாது என்று எண்ணிய அஜய் இதைக் கேட்டு மகிழ்ச்சியடையவில்லை. மோசமான நிதி நிலைமையைத் தாங்க முடியாமல், அஜய் வேறொரு நகரத்தில் வசிக்கும் தனது பணக்கார கோடீஸ்வரரான தந்தையை சந்திக்க முடிவு செய்கிறார். ஓரிரு நாட்களில் திரும்பி வருவேன் என்று பாவ்னாவிடம் கூறுகிறார். அஜய் பாவனாவை தனியாக விட்டுவிட்டு பல நாட்கள் கடந்து செல்கிறான். நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறும். இன்னும் அஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. அஜய் பாவ்னாவிடம் திரும்பி வரவே இல்லை. பாவ்னா அஜய்யின் தந்தையின் முகவரியை வாங்கி அஜயை தேடி செல்கிறாள். அஜய் தன் தந்தையின் விருப்பப்படி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை கண்டு பாவ்னா வியக்கிறார். மனச்சோர்வடைந்த பாவ்னா, தனது உற்ற தோழியான ஷோபாவிடம் தன் துயரங்களைச் சொல்கிறாள். ஆனால் இது அவளது வாழ்க்கைப் போராட்டங்களின் முடிவு அல்ல.

நடிகர்கள்

[தொகு]
  • பாவ்னா சக்சேனாவாக சபனா ஆஸ்மி
  • அஜய் கபூராக மார்க் ஜூபர்
  • டாக்டர் அனில் பி. சக்சேனாவாக கன்வால்ஜித் சிங்
  • ராம் கிஷனின் மகளாக ஊர்மிளா மடோன்கர் (குழந்தை கலைஞர்)
  • ஷோபாவாக ரோகினி ஹட்டங்கடி
  • ராம் கிஷனாக சயீத் ஜாஃப்ரி
  • திருமதி ராம் கிஷனாக ஆஷாலதா வப்கோன்கர்
  • நவாப்பாக விகாஸ் ஆனந்த்
  • மிஸ்டர் சின்ஹாவாக சதீஷ் ஷா
  • ராஜுவாக (அஜய்யின் நண்பன்) ராஜேஷ் பூரி

ஒலிப்பதிவு

[தொகு]

பாடலாசிரியர்: கைஃபி ஆசுமி

  1. "து கஹான் ஆ கயி ஜிந்தகி" - லதா மங்கேஷ்கர்
  2. "து கஹான் ஆ கயி ஜிந்தகி" (v2) - பாப்பி லஹிரி
  3. "பஹேலி சோட்டி சி" - கவிதா பட்வால், வனிதா மிஸ்ரா, குர்ப்ரீத் கவுர், ஆஷா போஸ்லே
  4. "தேகோ தின் யே ந தால்னே பாயே, ஹர் பால் இக் சாடி ஹோ ஜாயே" - ஆஷா போஸ்லே, கவிதா பௌட்வால்
  5. "மேரே தில் மை டூ ஹீ டூ ஹை" - சித்ரா சிங், ஜக்ஜித் சிங்

விருதுகள்

[தொகு]

32வது பிலிம்பேர் விருதுகள் :

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவ்னா_(திரைப்படம்)&oldid=4118458" இலிருந்து மீள்விக்கப்பட்டது