சித்ரா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா சிங்
2012 களில் சித்ரா சிங்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சித்ரா ஷோம்[1]
பிற பெயர்கள்சித்ரா தத்தா
பிறப்பு11 ஏப்ரல் 1940 (1940-04-11) (அகவை 84)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இசை வடிவங்கள்கசல், மேல்நாட்டுச் செந்நெறி இசை, பக்திப் பாடல்கள், கிராமிய இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1970 – 1990

சித்ரா சிங் ( Chitra Singh )[2] ( என்கிற ஷோம் ) [3] ஒரு இந்திய கசல் பாடகியாவார். இவர் தனது கணவர் ஜக்ஜீத் சிங்குடன் இணைந்து கசல் வகையை பிரபலப்படுத்தினார். [4] "கசல் உலகின் ராஜா மற்றும் ராணி" என்று மரியாதையுடன் அழைக்கப்படும் இவர்கள் இருவரும் சேர்ந்து 1970கள் மற்றும் 80களில் மிகவும் வெற்றிகரமான இந்திய இசையை உருவாக்கினர். [5] 1970களிலும் 1980களிலும் இசைத்தட்டுக்கள் வெளியிட்டுள்ளார். இந்திய பதிவிசை வரலாற்றில் ஓர் கணவன்-மனைவி இணையாக இவ்வாறு இசை பதிவதற்கு இவர்களே முன்னோடிகளாக கருதப்படுகின்றனர்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சித்ரா ஷோம், ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். தனது கல்வியை முடித்த பிறகு, ஒரு முன்னணி விளம்பர நிறுவனத்தில் நிர்வாகியான தெபோ பிரசாத் தத்தாவை மணந்தார். 1950 களின் நடுப்பகுதியில் திருமணம் நடைபெற்றது. 1959இல் இவர்களுக்கு மோனிகா என்ற மகள் இருந்தார். [6]

சித்ரா, பாடகரான சீக்கிய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஜக்ஜீத் சிங்கை சந்தித்தார். இவர்கள் முதன்முதலில் 1967 ஆம் ஆண்டில் ஒரு இசை பதிவரங்கத்தில் சந்தித்தனர். [7] ஜாக்ஜித்திடம் காதல் வயப்பட்ட சித்ரா 1968 ஆம் ஆண்டில், தனது 9 வயது மகளை அழைத்துக்கொண்டு பிரசாத்தை விட்டு வெளியேறினார். 1969 ஆம் ஆண்டில், தனது கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் ஜக்ஜித் சிங்கை மணந்தார்.[8] இவர்களுக்கு விவேக் என்ற மகன் பிறந்தார். தொழில் ரீதியாக, இவர்கள் கசல் பாடல்களை இரட்டையர்களாக உருவாகினர்.

பிற்கால வாழ்க்கை[தொகு]

மகன் விவேக் ஜூலை 27, 1990 அன்று சாலை விபத்தில் இறந்தார். சித்ரா தனது மகன் இறந்த நாளிலிருந்து இதுவரை பொது இடங்களில் பாடவில்லை. எந்தப் பாடலையும் பதிவு செய்யவில்லை. இவரது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மோனிகாவின் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமானதாக இல்லை. 2009 ஆம் ஆண்டில், 50 வயதான மோனிகா தற்கொலை செய்து கொண்டார். [9] [10] இந்த சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜக்ஜீத் சிங் 2011 இல் மூளைக் கசிவால் இறந்தார். தற்போது சித்ரா தனது இரண்டு பேரன்களுடன் வசித்து வருகிறார்.

சான்றுகள்[தொகு]

  1. "Flying solo with Chitra Singh".
  2. "Amina the Female Footballer". Amina the Female Footballer. 2016. doi:10.5040/9781350905863. http://dx.doi.org/10.5040/9781350905863. 
  3. Sahara, Rashtriya (1997). "Rashtriya Sahara, Volume 5, Issues 1-6". Google Books. Sahara India Mass Communication. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015.
  4. "Chitra Singh daughter found hanging; was depressed, says family". 30 May 2009.
  5. "Jagjit & Chitra Singh". AllMusic.
  6. "'I want to marry your wife,' Jagjit Singh asked Chitra's ex-husband... Pics | 'I want to marry your wife,' Jagjit Singh asked Chitra's ex-husband... Photos | 'I want to marry your wife,' Jagjit Singh asked Chitra's ex-husband... Portfolio Pics | 'I want to marry your wife,' Jagjit Singh asked Chitra's ex-husband... Personal Photos - ETimes Photogallery".
  7. First meeting
  8. "Jagjit called me Mummy, I called him Papa - Chitra Singh".
  9. Monica Chowdhary dies by suicide
  10. "Triple tragedy for Jagjit Singh's wife Chitra".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_சிங்&oldid=3685162" இலிருந்து மீள்விக்கப்பட்டது