உள்ளடக்கத்துக்குச் செல்

பாஞ்ச் இ அஸர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட் பைவ் இன் தி ஆப்டர்நூன்
இயக்கம்சமீரா மக்மால்பஃப்
கதைமோசன் மக்மால்பஃப்
சமீரா மக்மால்பஃப்
வெளியீடு16 மே 2003
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஈரான்/பிரான்சு

பாஞ்ச் இ அஸர்' (ஆங்கிலம்:At Five in the Afternoon, அட் பைவ் இன் தி ஆப்டர்நூன், பாரசீக மொழி: பாஞ்ச் இ அஸர்) ஒரு ஈரானியத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் கதையை எழுதியவர் மோசன் மக்மால்பஃப் ஆவார். இத்திரைப்படத்தை இயக்கியவர் சமீரா மக்மால்பஃப். இத்திரைப்படமானது தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின் கல்வி கற்க விரும்பும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லுகிறது. நேட்டோ படைகள் காபூலில் நுழைந்த பிறகு காபூலில் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படம் ஈரானிய மற்றும் பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாகும். ஈரானின் மோசன் மக்மால்பஃப் புரொடக்சன்ஸ் நிறுவனமும் பிரான்ஸின் பேக் பிலிம்ஸ் மற்றும் வைல்டு பன்ச் நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்தனர். இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றது.[1] சமீராவின் தங்கை ஹனா மக்மால்பஃப் அட் பைவ் இன் தி ஆப்டர்நூன் திரைப்படம் எடுப்பதை ஒரு ஆவணப்படமாக ஜாய் ஆப் மேட்னஸ் (Joy of Madness) எனும் பெயரில் எடுத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Festival de Cannes: At Five in the Afternoon". festival-cannes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-11-07.