சமீரா மக்மால்பஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமீரா மக்மால்பஃப்
பிறப்புபெப்ரவரி 15, 1980 (1980-02-15) (அகவை 43)
தெஹ்ரான், ஈரான்
பணிதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1998 முதல் இன்று வரை
பெற்றோர்மோசன் மக்மால்பஃப், மர்ஸி மெஷ்கினி

சமீரா மக்மால்பஃப் (Samira Makhmalbaf) ஈரானைச் சார்ந்தவர். இவர் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர் ஆவார்.இவர் பிப்ரவரி 15 ஆம் தியதி 1980 ஆம் ஆண்டு பிறந்தவர்.[1] இவர் மோசன் மக்மால்பஃப் அவர்களின் மகள் ஆவார். ஈரானின் புதிய தலைமுறை திரைப்பட இயக்குனர்களில் சமீரா குறிப்பிடத்தக்கவர். இவரது தங்கை ஹனா மக்மால்பஃப் ஆவார்.

இளமைப் பருவம்[தொகு]

தனது 14 வது வயதில் பள்ளியை விட்டு விலகி தனது தந்தையுடன் இணைந்து 5 வருடங்கள் திரைப்படங்கள் பற்றித் தெரிந்து கொண்டார். இரண்டு காணொளிகளைத் தயாரித்த பின்னர் தனது 17 ஆம் வயதில் தி ஆப்பிள் எனும் திரைப்படத்தை சமீரா இயக்கினார். 2000 ஆம் வருடம் மாஸ்கோவில் நடந்த 22 வது சர்வதேச திரைப்பட விழா நடுவர்களுள் ஒருவராகப் பொறுப்பு வகித்தார்.[2]

விருதுகள்[தொகு]

  • அட் பைவ் இன் தி ஆப்டர்நூன் திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றது.
  • 2001 ஆம் ஆண்டு இவரது ப்ளாக் போர்ட்ஸ் திரைப்படம் விருது பெற்றது.
  • 2002 ஆம் ஆண்டுயுனெஸ்கோ விருதைப் பெற்றார்.
  • தி கார்டியன் இதழ் தற்போதைய சிறந்த 40 இயக்குனர்களுள் சமீராவும் ஒருவர் எனக் குறிப்பிட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீரா_மக்மால்பஃப்&oldid=3553017" இருந்து மீள்விக்கப்பட்டது