பாகிஸ்தானியர்
பாகிஸ்தான் நாட்டின் குடிமக்கள் பாகிஸ்தானி என அழைக்கப்படுவர். இவர்களில் பல இனத்தவரும், பல்வேறு மொழிகளைப் பேசுவோரும், பல சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்.[1][2][3]
மொழிகள்
[தொகு]பாகிஸ்தானியரில் பல மொழிகள் பேசுவோர் உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் பஞ்சாபி மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 44% ஆக உள்ளனர். இவர்களைவிடப் பாஷ்தூ மொழி பேசுவோர் 15% ஆகவும், சிந்தி பேசுவோர் 14% ஆகவும், சராய்க்கி மொழி பேசுவோர் 11% ஆகவும் உள்ளனர். உருது நாட்டின் அரச மொழியாக இருப்பினும் அதனைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சுமார் 8% மட்டுமே. எனினும் பெரும்பாலான பாகிஸ்தானியர் உருது மொழியைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து சென்ற மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் முகாஜிர் (Muhajir) என்று அழைக்கப்படுகிறார்கள்.
சமயம்
[தொகு]இஸ்லாமிய மார்க்கம் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "U.S. and World Population Clock". United States Census Bureau.
- ↑ "Economic Survey 2014–15: Ishaq Dar touts economic growth amidst missed targets". The Express Tribune. 4 June 2015.
- ↑ "Statement showing number of Overseas Pakistanis living, working and studying in different regions/countries of the world, as on 31st December, 2017 - Region-Wise distribution" (PDF). Ministry of Overseas Pakistanis and Human Resource Development. 31 December 2018. Archived from the original (PDF) on 29 August 2019. பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.