பேச்சு:பாகிஸ்தானியர்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் இது பாகிஸ்தானியர் என வழங்கப்படுகிறதல்லவா ?వినోద్வினோத் 18:04, 19 ஜனவரி 2008 (UTC)

உண்மைதான். ஆனால் அச் சொல் பன்மைப் பொருள் கொடுக்கும் ஒரு சொல். ஒருமைப் பொருளில் பாகிஸ்தானி என்று சொல்லலாமா? மயூரநாதன் 18:11, 19 ஜனவரி 2008 (UTC)
பண்மையில் பாகிஸ்தானியர்கள் என கூற வேண்டும் என நினைக்கிறேன். இந்தியா --> இந்தியர் --> இந்தியர்கள் காண்க వినోద్வினோத் 18:14, 19 ஜனவரி 2008 (UTC)


இந்தியர் என்பதும் பன்மைதான். மயூரநாதன் 19:14, 19 ஜனவரி 2008 (UTC)

நான் இந்தகட்டுரைக்கு பாகிஸ்தானி என்பதற்கு தமிழில் மொழி பெயர்ப்பு செய்யவில்லை. இது அவர்கள் வழக்கு. நாம் மரியாதை கலந்து பாகிஸ்தானியர்கள் அல்லது பாகிஸ்தானியர் அழைக்கிறோம். அவர்களது வழக்கில் ஒருமையில் மற்றும் பன்மையில் பாகிஸ்தானி என்பதே சரி. வடமொழி மற்றும் உருது மொழியில் ஒருமையில் பாகிஸ்தானி, ஹிந்துஸ்தானி, மதராசி என அழைக்கின்றனர். எனவே நாம் பாகிஸ்தானியர்கள் என பெயர் மாற்றம் செய்வது சால சிறந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. ஷேக்ஃபரீத்

பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானி என்றிருக்க வேண்டும். பாகிஸ்தானி = paagisthaani --ரவி 13:03, 22 ஜனவரி 2008 (UTC)

தமிழில் பாக்கிஸ்தான் என்று எழுதும் வழக்கம் இல்லை என்றே நினைக்கிறேன். மற்றது விக்கிப்பீடியாவில் தலைப்புக்களைப் பன்மையில் கொடுக்கும் வழக்கம் இல்லை எனவே பாகிஸ்தானியர்கள் என மாற்றவேண்டியதில்லை என்பது எனது கருத்து.மயூரநாதன் 19:49, 22 ஜனவரி 2008 (UTC)

Start a discussion about பாகிஸ்தானியர்

Start a discussion