பராகாசு துணி
Appearance
செய்பொருள் | கம்பளியும் பருத்தியும் |
---|---|
உருவாக்கம் | கிமு 300–200 |
கண்டுபிடிப்பு | பெரு |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
பராகாசு துணிகள் பெரு நாட்டில் உள்ள ஒரு நெக்குரோபோலிசில் 1920 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நெக்குரோபோலிசு கிமு 200-300 ஆண்டுக் காலப் பகுதியில் பதப்படுத்தி அலங்கார வேலைப்பாடுகளோடு கூடிய துணிகளில் சுற்றி வைக்கப்பட்ட 420 உடல்களைக் கொண்டுள்ளது.[1] பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள இவ்வாறான ஒரு துணியில் தலைமுடியில் கொய்யப்பட்ட தலைகளைத் தாங்கியபடி பறக்கும் மந்திரவாதி ஒருவனின் உருவம் உள்ளது.[1]
இந்தத் துணியை உருவாக்கிய மக்கள் ஒரு சிக்கலான சமூகத்தைக் கொண்டிருந்தனர். அங்கே மட்பாண்டம், மீன்பிடித்தல், வேளாண்மை என்பன இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Paracas textile பரணிடப்பட்டது 2010-11-20 at the வந்தவழி இயந்திரம், British Museum, accessed 27 September 2010