பட்வாரி எருமை
பட்வாரி எருமை (Bhadwari) என்பது இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டம் மற்றும் இட்டாவா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பால் உற்பத்திக்காக முதன்மையாக வளர்க்கப்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட எருமை இனம் ஆகும். [1] மேலும் இந்த இன எருமைகள் மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திலும் வளர்க்கப்படுகின்றன. [2] இந்த பால் எருமைகள் வழக்கமாக பால் சுரக்கும் காலத்தில் 272 நாட்களில் சராசரியாக 752-810 கிலோ (1,658-1,786 பவுண்டு) பால் உற்பத்தி செய்கின்றன. [3]
எருமைகள் நாட்டின் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத பங்கை வகிக்கின்றன. நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் எருமைகள் பங்கு சுமார் 56%, அதுவே உலக அளவில் பால் உற்பத்தியில் 64% பங்களிக்கிறது, இவை மோசமான காலநிலையிலும் குறைந்த உணவை உட்கொண்டு நிறவான பலனைத் தருகின்றன.[4]
பட்வாரி எருமைகளின் பாலில் இருந்து தயாராகும் மோர் அதன் உயர் உள்ளடக்கத்தால் புகழ் வாய்ந்ததாக உள்ளது. இதன் பாலில் கொழுப்பு அளவு 6% இல் இருந்து உயர்ந்தபட்ச அளவாக 12.5 % வரை காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Breed data sheet: Bhadawari. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed September 2013.
- ↑ Altre razze பரணிடப்பட்டது 2016-06-16 at the வந்தவழி இயந்திரம் (in Italian). Associazione Nazionale Allevatori Specie Bufalina. Accessed September 2013.
- ↑ Sethi, R. K. (2003). Buffalo Breeds of India. Proceedings of Fourth Asian Buffalo Congress, New Delhi, India, 25 to 28 Feb.
- ↑ A.K. Das, Deepak Sharma and Nishant Kumar. (2008). “Buffalo Genetic Resources in India and Their Conservation.” Buffalo Bulletin 27.4 : 265-268. Print.