பட்வாரி எருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்வாரி எருமை (Bhadwari) என்பது இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டம் மற்றும் இட்டாவா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பால் உற்பத்திக்காக முதன்மையாக வளர்க்கப்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட எருமை இனம் ஆகும். [1] மேலும் இந்த இன எருமைகள் மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திலும் வளர்க்கப்படுகின்றன. [2] இந்த பால் எருமைகள் வழக்கமாக பால் சுரக்கும் காலத்தில் 272 நாட்களில் சராசரியாக 752-810 கிலோ (1,658-1,786 பவுண்டு) பால் உற்பத்தி செய்கின்றன. [3]

எருமைகள் நாட்டின் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத பங்கை வகிக்கின்றன. நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் எருமைகள் பங்கு சுமார் 56%, அதுவே உலக அளவில் பால் உற்பத்தியில் 64% பங்களிக்கிறது, இவை மோசமான காலநிலையிலும் குறைந்த உணவை உட்கொண்டு நிறவான பலனைத் தருகின்றன.[4]

பட்வாரி எருமைகளின் பாலில் இருந்து தயாராகும் மோர் அதன் உயர் உள்ளடக்கத்தால் புகழ் வாய்ந்த‍தாக உள்ளது. இதன் பாலில் கொழுப்பு அளவு 6% இல் இருந்து உயர்ந்தபட்ச அளவாக 12.5 % வரை காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Breed data sheet: Bhadawari. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed September 2013.
  2. Altre razze பரணிடப்பட்டது 2016-06-16 at the வந்தவழி இயந்திரம் (in Italian). Associazione Nazionale Allevatori Specie Bufalina. Accessed September 2013.
  3. Sethi, R. K. (2003). Buffalo Breeds of India. Proceedings of Fourth Asian Buffalo Congress, New Delhi, India, 25 to 28 Feb.
  4. A.K. Das, Deepak Sharma and Nishant Kumar. (2008). “Buffalo Genetic Resources in India and Their Conservation.” Buffalo Bulletin 27.4 : 265-268. Print.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்வாரி_எருமை&oldid=3219464" இலிருந்து மீள்விக்கப்பட்டது