பஞ்சமுகி அனுமான் கோயில்
சிறீ பஞ்சமுகி அனுமான் மந்திர் Shri Panchmukhi Hanuman Mandir | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | பாக்கித்தான் |
மாநிலம்: | சிந்து மாகாணம் |
மாவட்டம்: | கராச்சி கிழக்கு மாவட்டம் |
அமைவு: | சிப்பாய் பசார் |
ஆள்கூறுகள்: | 24°51′38.2″N 67°01′14.1″E / 24.860611°N 67.020583°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோவில் |
இணையதளம்: | https://m.facebook.com/ShriPunchMukhiHanumanMandir/ |
சிறீ பஞ்சமுகி அனுமான் மந்திர் (Shri Panchmukhi Hanuman Mandir) பாக்கித்தான் நாட்டிலுள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவிலாகும். சிந்து மாகாணத்தின் கராச்சி நகரிலுள்ள சிப்பாய் பசாரில் இக்கோயில் அமைந்துள்ளது. [1] 1,500 ஆண்டுகால பழமை வாய்ந்த கோயில் என்றும் அறியப்படுகிறது. இயற்கையான அனுமனின் திருவுருவச் சிலையைக் கொண்ட உலகின் ஒரே கோயில் சிறீ பஞ்சமுகி அனுமான் கோயில் என்ற சிறப்பும் இக்கோயிலுக்கு உள்ளது.[2] சிந்து கலாச்சார (பாதுகாப்பு) சட்டம் 1994 இன் கீழ் இக்கோயில் தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [3]
மத முக்கியத்துவம்
[தொகு]வனவாசத்தின் போது இராமர் இக்கோவில் இருக்கும் இடத்திற்கு வருகை தந்ததாக நம்பப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த இடத்தில் இருந்து பஞ்சமுகி அனுமன் சிலை தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. பஞ்சமுகி அனுமன் சிலையை 11 அல்லது 21 முறை வலம் வந்தால் பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. [4]
வரலாறு
[தொகு]தற்போதைய கோயில் அமைப்பு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கோவில் 2,609 சதுர அடி பரப்பளவில் இருந்தது. பின்னர் இந்த நிலத்தின் பாதி நில அபகரிப்பாளர்களால் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு, ஆக்கிரமிப்பு நிலத்தை கோவிலுக்கு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உத்தரவுக்கு பிறகும் பல ஆக்கிரமிப்பாளர்கள் கோவில் பகுதியை ஆக்கிரமித்து வருகின்றனர். 2012 ஆம் ஆண்டில், இந்து சமூகத்திடமிருந்தும் முத்தலாக் இயக்கத்திடமிருந்தும் [2] 2019 ஆம் ஆண்டில், புனரமைப்புப் பணிகளின் போது பல இந்து கடவுள்களின் சிலைகள் இக்கோயில் தளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. [5]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Diwali celebrations begin in Karachi Prayer services, ceremonies organised at temples across the city". Dawn. 27 October 2019. https://tribune.com.pk/story/2087907/diwali-celebrations-begin-karachi?amp=1.
- ↑ 2.0 2.1 "Recycling history: And all of Hanuman’s men put this temple together again". Express Tribune. 19 February 2012. https://tribune.com.pk/story/338875/recycling-history-and-all-of-hanumans-men-put-this-temple-together-again?amp=1.
- ↑ "Centuries-old statues discovered at ancient Hindu temple in Karachi". Arab News. 3 September 2019. https://www.arabnews.com/node/1549156/pakistan.
- ↑ Shazia Hasan (10 March 2020). "Holi celebrated in Karachi". Dawn. https://www.dawn.com/news/1539631.
- ↑ Shazia Hasan (10 March 2020). "Holi celebrated in Karachi". https://www.dawn.com/news/1539631.