பச்சா போசு
பச்சா போசு (Bacha posh) ("ஒரு பையனாக உடையணிந்து") என்பது ஆப்கானித்தான், பாக்கித்தானின் சில பகுதிகளில் மகன்கள் இல்லாத சில குடும்பங்கள் தங்களது ஒரு மகளை பையனாக நடத்தும் ஒரு நடைமுறையாகும். இது அக்குழந்தைக்கு தன்னுடைய சகோதரிகளை பொதுவெளியில் அழைத்துச் செல்வது, அவர்களுடன் வேலை செய்தல், சுதந்திரமாக நடந்து கொள்ளவது போன்றவற்றுக்கு உதவுகிறது.
தோற்றம்
[தொகு]இந்த நடைமுறை குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் பழையதாக இருக்கலாம். ஆனால், இன்றும் நடைமுறையில் உள்ளது.[1] போர்க்காலங்களில் பெண்கள் போராட, அல்லது தங்களைப் பாதுகாக்க ஆண்களாக மாறுவேடமிட்டுத் தொடங்கியிருக்கலாம்.[2]
வரலாற்றாசிரியர் நான்சி தூப்ரீ த நியூயார்க் டைம்ஸின் நிருபரிடம், அபீபுல்லா கான் ஆட்சியின் போது 1900களின் முற்பகுதியில் இருந்த புகைப்படத்தை நினைவு கூர்ந்தார். அதில் ஆண்களின் ஆடை அணிந்த பெண்கள் மன்னனின் அரண்மனையை பாதுகாத்தனர். ஏனெனில் அதிகாரப்பூர்வமாக, குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் தங்கும் அரண்மனைய பெண்களால் பாதுகாக்க முடியாது. "பிரிவினை படைப்பாற்றலுக்கு அழைப்பு விடுகிறது," இவ்வாறான குழந்தைகள் மிகவும் அற்புதமான சமாளிக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.[3]
நடைமுறையின் கண்ணோட்டம்
[தொகு]ஆப்கானித்தானில், குடும்பத்தின் குடும்பப் பெயரைத் தொடரவும், தந்தையின் சொத்தை வாரிசாகப் பெறவும் குடும்பங்களுக்கு சமூக அழுத்தம் உள்ளது. ஒரு மகன் இல்லாத நிலையில், குடும்பங்கள் தங்கள் மகள்களில் ஒருவரை ஆணாக அலங்கரிக்கொன்றனர். சிலர் இவ்வாறு செய்வதால், ஒரு தாய் அடுத்தடுத்த கர்ப்பத்தில் ஒரு மகனைப் பெற்றெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளனர்.[3]
ஒரு ஆண் குழந்தையாக வாழும் பெண் சிறப்பான ஆண் ஆடைகளை அணிந்து, தன்னுடைய தலைமுடியைக் குறைத்துக் கொண்டு, [4] ஆண் பெயரைப் பயன்படுத்துவார். இந்த நடைமுறையின் நோக்கம் ஏமாற்றுதல் அல்ல. ஆசிரியர்கள் அல்லது குடும்ப நண்பர்கள் போன்ற பலரும், இவ்வாறான குழந்தை உண்மையில் ஒரு பெண் என்பதை அறிந்திருப்பார்கள். அவளுடைய குடும்பத்தில், அவள் ஒரு இடைநிலை அந்தஸ்தைப் பெறுவாள், அதில் அவள் ஒரு மகளாகவோ அல்லது முழுமையாக ஒரு மகனாகவோ கருதப்படுவதில்லை. ஆனால் அவள் மற்ற பெண்களைப் போல சமைக்கவோ சுத்தம் செய்யவோ தேவையில்லை. ஒரு பச்சாவாக, ஒரு பெண் பள்ளிக்குச் செல்லவும், சிறுசிறு வேலைகளை செய்யவும்,, பொதுவில் சுதந்திரமாக செல்லவும், ஆண் தோழன் இல்லாமல் இருக்க முடியாத இடங்களில் தனது சகோதரிகளை அழைத்துச் செல்லவும், விளையாட்டு விளையாடவும் வேலை தேடவும் மிகவும் எளிதாக இருக்கிறாள்.[3]
ஒரு பச்சா போசு என்ற பெண்ணின் நிலை பொதுவாக பருவமடையும் போது முடிவடைகிறது. இவ்வாறான நாகரிகத்தில் வளர்க்கப்படும் பெண்கள் பெரும்பாலும் ஒரு சிறுவனாக வாழ்க்கையிலிருந்து மாறுவதும் ஆப்கானித்தான் சமூகத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட பாரம்பரிய தடைகளுக்கு ஏற்ப மாறுவதிலும் சிரமப்படுகின்றனர்.[3]
அஜீதா ரஃபாத், ஆப்கானித்தானின் தேசிய சட்டசபைக்கு பட்கிஸ் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மகன்கள் இல்லை. மேலும் தனது மகள்களில் ஒருவரை பச்சாவாக வளர்த்தார். "ஒரு தாய் ஏன் தனது இளைய மகளுக்கு இதைச் செய்கிறாள் என்பதை நீங்கள் நம்புவது மிகவும் கடினம்," "ஆப்கானித்தானில் நடக்கும் விஷயங்கள் உண்மையில் மேற்கத்திய மக்களாகிய உங்களுக்கு கற்பனை செய்ய முடியாதவை என்று அவள் புரிந்து கொண்டாள்.[3]
விளைவுகள்
[தொகு]வளர்ச்சி மற்றும் மருத்துவ உளவியலாளர் தயான் எரென்சாஃப்ட், சிறுவர்களைப் போல நடந்துகொள்வதன் மூலம், பச்சா போசு அவர்களின் உண்மையான பாலின அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் பெற்றோரின் நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இணங்குவதாகக் கருதுகிறார். பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு மிதிவண்டி ஓட்டுதல், கால்பந்து, துடுப்பாட்டம் விளையாடுதல் போன்ற சலுகைகளை வழங்குவதை மேற்கோள் காட்டுகிறார்கள். இல்லையெனில் பெண்களுக்கு இது கிடைக்காது.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ Ford, Cheryl Waiters, with Darnella (October 2011). Blood, sweat, and high heels: a memoir. Bloomington: iUniverse. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1462054961.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Shah, Mudassar (August 24, 2012). "Boys no more".
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Nordberg, Jenny. "Where Boys Are Prized, Girls Live the Part", த நியூயார்க் டைம்ஸ், September 20, 2010. Accessed September 20, 2010.
- ↑ Tahir Qadiry (March 27, 2012). "The Afghan girls who live as boys". BBC News. பார்க்கப்பட்ட நாள் March 28, 2012.
- ↑ Menvielle, Diane Ehrensaft; foreword by Edgardo (17 May 2011). Gender born, gender made: raising healthy gender-nonconforming children (3rd ed., rev. and updated. ed.). New York: Experiment. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1615190607.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)