பசுமலை
பசுமலை
பசுமலை | |
---|---|
ஆள்கூறுகள்: 9°53′48.5″N 78°04′36.5″E / 9.896806°N 78.076806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 166 m (545 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625004 |
தொலைபேசி குறியீடு | 0452 |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பைகாரா, விளாச்சேரி, ஆண்டாள் புரம், வசந்த நகர் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
பசுமலை என்ற புறநகர்ப் பகுதி, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] பசுமை மிகுந்த மரங்கள் மற்றும் செடிகள் அதிகம் கொண்ட சிறு குன்று (பசுமலை) சார்ந்த ஊர் இது. 'தேசியம் எனது உடல்; தெய்வீகம் எனது உயிர்'என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தலைவரான 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்', நூற்பாலை சம்பந்தமாக 'மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பு' என்ற தொழிற்சங்கம் ஏற்படுத்தியது பசுமலையில் தான்.[2] 'The Gateway Hotel Pasumalai, Madurai' என்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று, பசுமலையின் குன்றின் மீது அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 166 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பசுமலை நகரின் புவியியல் ஆள்கூறுகள்: 9°53'48.5"N, 78°04'36.5"E (அதாவது, 9.896800°N, 78.076800°E) ஆகும்.
போக்குவரத்து
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]மதுரை நகரின் பல பகுதிகளை சாலை மார்க்கமாக பசுமலை இணைக்கிறது. மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலை, பசுமலை வழியாகச் செல்கிறது. அரசு மாநகரப் பேருந்து போக்குவரத்து பணிமனை ஒன்று பசுமலையில் உள்ளது.[3] மதுரை - பெரியார் பேருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடருந்து போக்குவரத்து
[தொகு]அருகிலுள்ள திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது. மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
வான்வழிப் போக்குவரத்து
[தொகு]அவனியாபுரத்தில் உள்ள மதுரை வானூர்தி நிலையம், சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கல்வி
[தொகு]மேல்நிலைப் பள்ளி
[தொகு]பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது பள்ளிப் பருவத்தில், சில வருடங்கள் கல்வி கற்ற 'பசுமலை மேல்நிலைப் பள்ளி' இங்கு தான் உள்ளது.
கல்லூரிகள்
[தொகு]மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு இசைக் கல்லூரி ஆகியவை பசுமலையில் உள்ளன. சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. தொலைவில் மதுரை கல்லூரி (கலைக்கல்லூரி)யும், தமிழ்நாடு பல்தொழில் நுட்பக் கல்லூரியும் உள்ளன.
ஆன்மீகம்
[தொகு]கோயில்
[தொகு]அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், இங்கிருந்து சுமார் இரண்டே கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருச்சபை
[தொகு]தென்னிந்தியத் திருச்சபை தன் கிளை ஒன்றை பசுமலையில் கொண்டுள்ளது. அதில் முதியோர் வாழ்வில்லம் ஒன்றும் உள்ளடங்கியிருக்கிறது. [4]
தர்கா
[தொகு]திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள திருப்பரங்குன்றம் தர்கா இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kōvintarācan̲ār, Cin̲n̲aiyā (1991). Kannakiyar aticcuvattil. Maturai Kāmarācar Palkalaikkal̲akam.
- ↑ "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்வில் எழுச்சி பெற்ற தலைவர்" (in ta). http://www.onetamilnews.com/News/pasumbon-muthuramalinga-devar-was-a-rising-leader-in-li.
- ↑ "மழையால் ஒழுகிய பேருந்து:பயணிகள் அவதி". Dinamani. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/oct/11/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3930487.html.
- ↑ Reporter, Staff (2022-05-23). "Exploring trees on CSI campus in Madurai" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/exploring-trees-on-csi-campus-in-madurai/article65454366.ece.