பசந்த குமார் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்த குமார் தாசு
பிறப்பு(1899-09-21)21 செப்டம்பர் 1899
இறப்பு6 ஏப்ரல் 1957(1957-04-06) (அகவை 57)
குடியுரிமைஇந்தியர்
துறைமீன்வளம், விலங்கியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
Academic advisorsஇந்திய அறிவியல் கழக மாநாடு

பசந்த குமார் தாசு (Basanta Kumar Das)(21 நவம்பர் 1899 - 6 ஏப்ரல் 1957) என்பவர் இந்திய மீன்வள விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் காற்றைச் சுவாசிக்கும் மீன்களைப் பற்றி ஆய்வு செய்துள்ளார். ஐதராபாத்திலுள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

வாழ்க்கை மற்றும் வேலை[தொகு]

தாசு மேற்கு வங்காளம், வர்தமான் மாவட்டத்தில் உள்ள கங்கூரில் பிறந்தார். இவர் முயர் மத்திய கல்லூரியில் சேர்ந்து 1918-ல் எம். எஸ். பட்டம் பெறுவதற்கு முன்பு அலகாபாத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றார். இவர் 1920-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். வெளிநாட்டில் படிக்க உத்தரப் பிரதேச மாநில உதவித்தொகை பெற்றார். இவர் இம்பீரியல் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு ஈ. டபுல்யூ. மெக்பிரைடின் வழிகாட்டுதலின் கீழ் காற்றைச் சுவாசிக்கும் மீன்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.[1][2] 1926-ல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் (1926-31) விலங்கியல் பேராசிரியரானார். இதன் பின்னர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் (1931-52) பணியில் சேர்ந்தார். இவர் 1953 முதல் இறக்கும் வரை மீன்வள பிரிவு இயக்குநராக இருந்தார். ஐதராபாத் மிருகக்காட்சிசாலையின் திட்டமிடலிலும் ஈடுபட்டுள்ளார். 1940-ல் இந்திய அறிவியல் மாநாட்டின் விலங்கியல் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கினார். 1931-ல் இம்பீரியல் கல்லூரியின் கக்சிலி நினைவுப் பரிசைப் பெற்றார்[3] .

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த_குமார்_தாசு&oldid=3412310" இலிருந்து மீள்விக்கப்பட்டது