நோவு விறைப்பு
நோவு விறைப்பு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | சிறுநீரியல் |
ஐ.சி.டி.-10 | N48.3 |
ஐ.சி.டி.-9 | 607.3 |
நோய்களின் தரவுத்தளம் | 25148 |
ஈமெடிசின் | med/1908 |
ம.பா.த | D011317 |
நோவு விறைப்பு அல்லது நோவு குறிவிறைப்பு (priapism) என்பது காமத் தூண்டலேதுமின்றி உண்டாகும் மோசமான, வலியுடன் கூடிய, ஆண்குறி அல்லது பெண்குறி விறைப்பாகும். விறைத்தக் குறியானது மணிக்கணக்கில் அவ்வாறே இருக்கும். இது ஒரு மருத்துவ உடன்தீர்வுக்கான (அவசர) நிலை ஆகும்.[1][2][3]
சொற்காரணம்
[தொகு]piripism (பிரியாப்பிசம்) எனும் ஆங்கிலச் சொல் எந்நேரமும் ஆண்குறி விறைத்த நிலையிலுள்ள கிரேக்கக் கடவுளான பிரையாபசு என்போனின் பெயரடியாய்ப் பிறந்தது.
காரணங்கள்
[தொகு]- குருதி நோய்கள் - சிக்கிள் செல் நோய், வெள்ளையணுப் புற்றுநோய், தலசீமியா
- நரம்பியல் நோய்கள் - தண்டுவட நோய்கள்
- மருந்துகள் - ஆண்குறி விறைப்பின்மைக்குதவும் மருந்துகள், சில மனநோய் மருந்துகள்
பின்விளைவுகள்
[தொகு]நெடுநேரம் ஆண்குறி விறைத்த நிலையிலேயே இருப்பதால் அதற்கான இரத்த ஓட்டம் தடைபடும். குருதிக்கட்டிகள் ஆண்குறியின் இரத்தக்குழாய்களில் தங்கி விட வாய்ப்புண்டு. இது பின்னாளில் ஆண்குறி விறைப்பைப் பாதித்து ஆண்மையிழப்பை உண்டு செய்யலாம். நீண்ட நேரம் இரத்த ஓட்டம் இல்லையேல் ஆண்குறி அழுகி ஆண்குறியை அகற்ற வேண்டிய அவசிய நிலை உருவாகலாம்.
மருத்துவம்
[தொகு]சற்றும் தாமதமின்றி உடனடியாக மருத்துவ உதவி நாடப்பட வேண்டும். சிக்கிள் செல் அல்லது அரிவாள் செல் நோயர்களில் முதலில் பரிமா்றறுக் குருதியேற்றம் தான் செய்யப்பட வேண்டும். மற்ற நிலைகளில் அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டியிருக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:OED2 (as /ˈpraɪəpɪz(ə)m/)
- ↑ "Priapism". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2017-03-07. "Definition of PRIAPISM". Archived from the original on 2017-06-06. பார்க்கப்பட்ட நாள் 2017-09-10.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link). - ↑ Lehmiller, Justin J. (2014). The Psychology of Human Sexuality. John Wiley & Sons. p. 545. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-16470-8. பார்க்கப்பட்ட நாள் February 8, 2018.