உள்ளடக்கத்துக்குச் செல்

நீலம்பெரூர் படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலம்பெரூர் படையணி

நீலம்பெரூர் படையணி என்பது இந்தியாவின் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள நீலம்பெரூர் பள்ளி பகவதி அம்மன் கோவிலில் நடத்தப்படும் படையணி பாரம்பரியத் திருவிழா ஆகும். இத்திருவிழா திருவோனம் மாதத்திற்குப் பிறகு பூரம் தினத்தில் 16 நாட்களுக்கு நாட்களுக்கு இந்த சடங்கு செய்யப்படுகிறது..[1]

படையணி சொற்பிறப்பியல்

[தொகு]

படையணி என்ற சொல்லுக்கு காலாட்படை என்று பொருள்படும். படைவீரர்கள் போன்று வரிசையான நிற்கும் முறை காரணமாக படையணி என்ற பெயர் வந்தது.[1]

புராணத்தில் படையணி

[தொகு]

நீலமபெரூர் படையயின் புராணம் சேரமன் பெருமாள் புராணங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. நீலம்பெரூருக்கு மன்னர் சேரமன் பெருமாள் வந்த பிறகு இந்தச் சடங்கு முறை தொடங்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இந்த திருவிழாவிற்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு இருந்தது என்று நம்பப்படுகிறது. இது இந்து மதம் மற்றும் பௌத்த மதங்களின் கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. சீனப் பயணி பாசியான் இந்த திருவிழா பாட்னாவில் உள்ள பௌத்தர்களின் பண்டிகையை ஒத்திருப்பதாக தனது பயணக் குறிப்பில் சித்தரித்தார்.

சடங்குகள்

[தொகு]

கேரள கோயில்களில் நடைபெறும் மற்ற படையணி நிகழ்ச்சிகளிலிருந்து நீலம்பெரூர் படையணிக்கு சில வித்தியாசங்கள் உள்ளன. இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் உருவ பொம்மைகளின் ஊர்வலம். அவற்றில் அன்னம், யானை போன்ற விலங்குகளின் உருவங்களும், வீமன், இராவணன், யட்சினி போன்ற தெய்வத்திற்கு பிரசாதமாக உள்ளன. இந்த அலங்கரிக்கப்பட்ட உருவங்கள் கேரளாவில் உள்ள கலைஞர்களின் கைவினைத்திறனைக் காட்டுகிறது. படையணி பகவதி (தெய்வம்) பிறந்த நாளை கொண்டாடப்படும் பூரம் நாள் திருவோனம் நாள் இறுதியில் தொடங்குகிறது. சடங்குகளின்படி, பகவதி கோயிலின் மேற்குப் பகுதியில் சேரமான் பெருமாளின் அடையாள அனுமதியுடன் படையணி தொடங்கப்படுகிறது. பக்தர்கள் தேங்காய் இலைகளை எரித்த தீப்பந்தங்களுடன் பெருமாள் நினைவுச்சின்னத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர். இந்த சடங்கு நான்கு நாட்கள் நீடிக்கும்.[2]

இந்த நாட்களைத் தொடர்ந்து குடபடையணி தேங்காய் இலைகளின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் குடையில் மலர் அலங்காரங்களைக் கொண்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களில் பலாமர இலைகளால் ஆன உருவங்கள் தெய்வத்திற்கு வழங்கப்படுகின்றன. கடைசி இரண்டு நாட்களில் அன்னப்பட்சி உருவங்கள் உள்ளன, அவை வாழை தண்டுகள் மற்றும் தென்னை மரங்களின் மெல்லிய இலைகளால் ஆனது, இக்ஸோரா மலர் அலங்காரங்களுடன். கடைசி நாளின் சிறப்பம்சமாக 45 அடி நீளமுள்ள அன்ன உருவம் உள்ளது.[2]

தோதக்களி, நூதன முரசு மற்றும் பாரம்பரிய இசையுடன் நெருப்பின் முன் நிகழ்த்தப்படும் ஒரு தாள நடனம் நீலம்பெரூர் படையணியின் மற்றொரு பகுதியாகும்.[2]

நீலம்பெரூர் கிராமம்

[தொகு]

நீலம்பூர் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது உப்பங்கழிகள், ஏரிகள் மற்றும் நெல் வயல்களுக்கு பிரபலமானது. இந்கு வசிக்கும் மக்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள்.இந்த இடத்திற்கான முக்கிய அடையாளமாக நீலம்பூர் பல்லி பகவதி கோயிலில் திகழ்கிறது, இது புகழ்பெற்ற திருவிழாவான "பூரம் படையணி"க்கு புகழ்பெற்றது, பூரம் படையணி என்பது ஓனம் திருவிழாவுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழா, பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்க்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த கோயில் முதலில் ஒரு புத்த கோவிலாக இருந்தது. பி.என்.பனிகர், நீலம்பூர் மதுசூதனன் நாயர், மற்றும் பல கதகளி கலைஞர் மற்றும் பலர் நீலம்பெரூரைச் சேர்ந்தவா்களாவர்.

முக்கிய விழாக்கள்

[தொகு]
  • சுட்டீடல்
  • குடம்பூசைக் களி
  • அனுஜ்னவங்கல்
  • தோதக்களி
  • தெங்கமுரிக்கல்
  • குடனிருத்து
  • பிளாவிலனிருத்து
  • மக்கம் படையணி
  • பூரம் படையணி

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Neelamperoor padayani". keralatourism.org. Department of tourism, கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 7 September 2019.
  2. 2.0 2.1 2.2 "Rituals of Padayani". www.keralatourism.org. Department of Tourism, கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 26 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்பெரூர்_படையணி&oldid=3747701" இலிருந்து மீள்விக்கப்பட்டது