நீர்பாசன முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசன முறைகள்[தொகு]

1. ஆற்று நீர் பாசனம் 2. கிணற்று நீர்ப்பாசனம், 3. ஏரி நீர்ப்பாசனம், 4. மழை நீர்ப்பாசனம் நீர்ப்பாசனம் 5. அடுக்கு நீர்ப்பாசனம் 6. தெளிப்பு நீர்ப் பாசனம் 7. அலைநீர்ப் பாசனம் 8. சொட்டு நீர் பாசனம்

ஆற்று நீர்ப்பாசனம்[தொகு]

ஆற்றில் நீர் வந்தால் மட்டுமே வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் பழக்கம் இன்றும் உள்ளது. இது ஆற்றிலுள்ள மடைகளிலிருந்து, வரப்புகள் வழியாய் பயிர்களுக்குப் போய் சேரும்.

கிணற்று நீர்ப்பாசனம்[தொகு]

கிணறுகளில் நீர் சுரப்பது என்பது அருகிலுள்ள ஆற்றில் நீர் வரும்போது ஆகும், அதை ஏற்றம் அல்லது மாடுகளைக் கட்டி சால் மூழம் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் முறையாகும்.

மழை நீர்ப்பாசனம்[தொகு]

இதுவே உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனமாகும். இயற்கையாக பெய்யும் மழையே பூமியில் அதிக இடங்களுக்கு நீரை இறைக்கிறது, இதைக்கொண்டுதான் இத்தனை காடுகளும் மரங்களும் வளர்கின்றன. தமிழ்நாட்டில் வானம் பார்த்த பூமி என்று இருக்கும் இடங்கள் இன்றும் உள்ளன.

ஏரி நீர்ப்பாசனம்[தொகு]

ஆறு அல்லது மழை நீரை குளங்களில் சேமித்து வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது ஏரிப்பாசனமாகும்.

அடுக்கு நீர்ப்பாசனம்[தொகு]

அதிக அழுத்த பாசன முறைகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் இருந்தாலும் பாரம்பரிய முறையான மண்ணின் மேற்பரப்பில் பாசனம் செய்யும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது.இதனுடைய எளிமையான அமைப்பு முறை,அமைப்பதற்கான குறைந்த செலவு, மற்றும் செயல்படுத்தும் செலவு குறைவு என்பதாலும் இந்த முறை விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது.சிறிய வரிசை பள்ளம் மற்றும் தடுப்புப்பாத்தி அமைப்பு முறைகள் (தமிழ்நாட்டில் முக்கியமான பாசனமுறையாகும்)அல்லது செவ்வக வடிவ வயல்களில் குறுக்கு நெடுக்கு வரப்பு அமைத்து, வாய்க்கால் வழியே நீர்ப்பாய்ச்சப்படுகிறது.இந்த முறையில் நீர்ப் பாய்ச்சுவதற்கு நெடு நேரம் எடுத்துக் கொள்கிறது மற்றும் பாசன பயன்பாடு 55 - 65% அதிக கசிவு, ஆழமான துளை வழி கசிவு மற்றும் ஓடுநீர் இழப்பு (35 - 45%) குறைகிறது.இது மட்டுமல்லாமல் மேடு பள்ளம் உடைய குறுக்கு நெடுக்கு அமைப்பு முறையில் 15 - 25% நீர் இழப்பு ஏற்படுகிறது.இதைக் குறைப்பதற்கும் அதிக நீர்ப்பாசனம் செய்வதைத் தடுப்பதற்கும் புதிய முறையாக அலைநீர் பாசனம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அதிக பரிசோதனைகள் செய்து 1992 – 95 ல் அதிக நீர் விசையியல் ஆய்வு மற்றும் பயிருக்கு ஓத்துப் போகிறதா என்றும் ஆய்வு செய்து இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தெளிப்பு நீர்ப் பாசனம்[தொகு]

நிலப்பரப்பிற்கு மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்க செய்கிறது குறைவான அழுத்தம் (1.0 கிலோ / செ.மீ2 ) ஒரு தெளிப்பானை செயல்படுத்த தேவைப்படுகிறது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்று வட்டாரம் வரை தெளிக்கலாம் 4 – 5 கிலோ / செ.மீ2 அழுத்தம், 4 தெளிப்பானை ஒரே நேரத்தில் பயன்படுத்த தேவைப்படுகிறது.காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர் இழப்பைத் தடுக்கலாம் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தெளிப்பானைப் பயன்படுத்துவதால் ஆவியாகுதல் இழப்பைத் தடுக்கலாம்.

அலைநீர்ப் பாசனம்[தொகு]

வெள்ளப் பாசன அல்லது அலைநீர் பாசன முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பழைய முறையாகும்.இது தான் பயிர்களை சாகுபடி செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பாசன முறை.வயலுக்கு நீர் பள்ளம், குழாய் அல்லது வேறு வழியில் பாய்ச்சப்படுகிறது.வெள்ளப் பாசன முறை பயனுள்ள பாசன முறையாக இருந்தாலும் இந்த முறை மற்ற முறைகளை விட பயன்பாடு குறைவாக உள்ளது. இந்த முறையில் அளிக்கப்படும் நீரில் பகுதி நீர் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது.மீதமுள்ள நீர் ஆவியாதல் வழிந்தோடும் நீர், நீர் உள்ளீர்ப்பு மற்றும் நீராவியாதல் மூலம் இழப்பு ஏற்படுகிறது.

சொட்டு நீர் பாசனம்[தொகு]

பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.முக்கிய பகுதியில் மேல் நிலைத் தொட்டி இருக்கும்.முக்கிய குழாய் பகுதியில் 50 மி.மீ, 75 மி.மீ, எச். டி. பி. இ அல்லது பி.வி.சிகுழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.துணை குழாய் பகுதியில் 45 மி.மீ, 50 மி.மீ எச்.டி.பி.இ. குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன.பக்கவாட்டில், 12 மி.மீ, 16 மி.மீ, எல்.டி.பி.இ பயன்படுத்தப்படுகின்றன.சொட்டு குழாய்கள் – 2 எல்.பி.எச், 4 எல்.பி.எச், 8 எல்.பி.எச் அழுத்தமுடைய வகைகள் மிகவும் ஏற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்பாசன_முறைகள்&oldid=3945482" இலிருந்து மீள்விக்கப்பட்டது