தெளிப்பு நீர்ப்பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெளிப்பு நீர்ப் பாசனம்(sprinkler irrigation) என்பது நவீன பாசன முறைகளில் ஒரு தொழில் நுட்பமாகும். நிலத்தின் மேற்பரப்பில் குழாய் வழியாக வரும் நீரை மழை பெய்வது போல தெளிக்க செய்வது. நீரை தேவையான அழுத்தத்தில் செலுத்தி குழாயின் நுணியில் உள்ள தெளிப்பான் மூலமாக தெளிப்பது. இம்முறையில் எச்.டி.பி.ஈ(HDPE) என்னும் அதிக அடர்த்தி கொண்ட பாலியெத்திலீன் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கபட்ட குழாய்கள், இரும்பு குழாய்கள்(GI) மற்றும் தெளிப்பான்கள் கொண்டு பரவலாகத் தாவரத்தின் மேல் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்ற வட்டாரம் வரை நீரை தெளிக்கலாம். மலைப்பகுதிகளில் மேடு பள்ளம் இல்லாத பகுதிகள், மலைத்தோட்டம் பயிர்களான தேயிலை, காபி, முன்பே பூ உதிராத பயிர்களான நிலக்கடலை, பருத்தி போன்றவற்றில் பயன்படுத்தலாம்.[1]

தெளிப்பு நீர்ப் பாசனம் செய்ய பயன்படும் உபகரணங்கள்[தொகு]

பம்ப்செட் நீர் நிலைகளில் உள்ள நீரை குழாய்கள் வழியாக தாவரங்களுக்கு குறிப்பிட்ட திறன் கொண்ட மின் மோட்டர் (அ) எண்ணெய் மோட்டர் உதவியுடன் தேவையான அளவு வேகத்தில் கொண்டு நீரை பாய்ச்சுகிறது

முதன்மைக் குழாய் & துணைக் குழாய்கள் ஹை டென்சிட்டி HDPE என்னும் அதிக அடர்த்தி கொண்ட பாலியெத்திலீன் கொண்டு பாசனத்திற்கு என்றே பிரத்யேகமாக வெவ்வேறு அளவுகளில்    2.5 KG/cm2  அழுத்தம் தங்குமாறு (63mm-90mm )மிகச்சிறந்த தரத்துடன் தயாரிக்கிப்படுகிறது.இதனுடன் coupler இணைந்து வருவதால் குழாய்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது அகற்றுவது மிக எளிது.

ஷாடல் (Saddle) மெயின் குழாய்களில் இருந்து ரைசர் குழாய்களில் இணைக்க உதவுகிறது. HDPE குழாய்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து,ரைசர் பைப்புகளையும் இணைக்கிறது. ரைசர் பைப்புகளை இணைத்து நிலத்தில் நிற்க செய்ய  இரும்பு க்ளாம்பு ஒன்று கொண்டிருக்கும்.

HDPE இணைப்பான்கள் குழாய்களை ஒன்றோடு ஒன்று இணைக்க பயன்படும் இணைப்பான்கள் HDPE எனப்படும் அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலீன் மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. HDPE Bend, HDPE Tee, HDPE PCN, HDPE End cap, போன்றவைகளை தேவைக்கேற்ப உபயோகித்து கொள்ள வேண்டும்.

ரைசர் பைப் (RAISER PIPE) ரைசர் பைப்  என்பது இரும்பு உலோகத்தால் தயாரிக்கப்படும் இரும்பு குழாய்களாகும். இது நிலப்பகுதியில் இருந்து இரண்டு மூன்று அடி  தெளிப்பான்களை உயர்த்தி நிற்க வைத்து செயல்பட உதவுகிறது.

மழைத்தூவான் தோட்டப் புல் பரப்பு மற்றும் தாவரங்களுக்கு நீர் தெளிக்க, தனது துளைகள் வழியாக அனைத்து திசைகளிலும் சிறு துளிகளாக நீரை வெளியேற்றும்கருவி நீர் தெளிப்பான் ஆகும்.  

பராமரித்தல்[தொகு]

குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள் மற்றும் தெளிப்பான் தலைகள் பராமரிப்பு தொடர்பான பொதுவான கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்

குழாய்கள் மற்றும் பொருத்துதல்களுக்கு கிட்டத்தட்ட பராமரிப்பு தேவையில்லை, ஆனால் பின்வரும் நடைமுறைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

(அ) ​​ரப்பர் சீல் வளையம் பொருந்திய கப்ளரில் உள்ள அழுக்கு அல்லது மணலை அவ்வப்போது சுத்தம் செய்யவும். அழுக்கு அல்லது மணல் குவிவது ரப்பர் சீல் வளையத்தின் செயல்திறனை பாதிக்கும்.

(ஆ) அனைத்து நட் மற்றும் போல்ட்களையும் இறுக்கமாக வைத்திருங்கள்.

(இ) புதிய ஈரமான கான்கிரீட் அல்லது உரக் குவியல்களில் குழாய்களைப் போடாதீர்கள். குழாயில் உர சாக்குகளை வைக்கக் கூடாது.


2. தெளிப்பான்கள்

(அ) ​​தெளிப்பான்களை நகர்த்தும்போது, ​​தெளிப்பான்கள் சேதமடையாமல் அல்லது மண்ணுக்குள் தள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும்.

(ஆ) தெளிப்பான்களுக்கு எண்ணெய், கிரீஸ் அல்லது லூப்ரிகண்ட் ஆகியவற்றைப்  பயன்படுத்துவதால்  துரு பிடித்தலை  தடுக்கலாம்.

(இ) தெளிப்பான்கள் பொதுவாக சீல் செய்யப்பட்ட தாங்கி மற்றும் தாங்கியின் அடிப்பகுதியில் ரப்பார் வாசர்கள்  இருக்கும். ஒரு பருவத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாசர்கள் தேய்ந்து இருக்கிறதா என்று சோதிக்கவும், இது தண்ணீர் மணலாக இருக்கும் இடங்களில் மிகவும் முக்கியமானது. வாசர்கள் தேய்ந்திருந்தால் மாற்றவும்.

(ஈ) பல பருவங்களின் செயல்பாட்டிற்குப் பிறகு, ஸ்விங் ஆர்ம் ஸ்பிரிங் இறுக்கப்பட வேண்டியிருக்கும். மேலே உள்ள ஸ்பிரிங் முனையை வெளியே இழுத்து மீண்டும் பிணைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. . பொதுவாக, பருவ  முடிவில் அனைத்து உபகரணங்களையும் சரிபார்த்து, ஏதேனும் பழுது மற்றும் மாற்றங்களைச் செய்து, உதிரி பாகங்களை உடனடியாக AGS Irrigation -ல் ஆர்டர் செய்யுங்கள், இதனால் அடுத்த பருவம் தொடங்குவதற்கு உபகரணங்கள் சரியான நிலையில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தெளிப்பு நீர்ப் பாசனம்". தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். 27 November 2021 அன்று பார்க்கப்பட்டது.